டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று நீர் திறப்பு
திருச்சி: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் இன்று அதிகாலை கல்லணையை வந்தடைந்தது. இதனையடுத்து டெல்டா பாசன விவசாயத்துக்காக கல்லணையில் இன்று நீர் திறந்துவிடப்படுகிறது.
கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் 118 அடியை எட்டிய நிலையில் டெல்டா பாசன விவசாயத்துக்காக நீர் திறந்துவிடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின்,மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்துவிட்டார்.

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் இன்று அதிகாலை கல்லணையை வந்தடைந்தது. இதனையடுத்து காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. கல்லணை நீர் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பிக்கள், மாவட்ட ஆட்சியர்கள், எம்.எல்.ஏக்கள், விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக டெல்டா மாவட்டங்களில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. இதனால் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் எந்த தடையுமின்றி கடைமடை பகுதியையும் விரைவாக சென்றடையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications