விஜய்க்கு மாற்று வேட்பாளராக திருச்சி கிழக்கில் மனு தாக்கல் செய்த சிரஞ்சீவி.. யார் இவர்?
திருச்சி: தவெக தலைவர் விஜய் எதிர்வரும் சட்டசபை தேர்தலில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் டம்மி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
மாற்று வேட்பாளர் (Substitute Candidate) என்பது ஒரு அரசியல் கட்சி தனது முதன்மை வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால், தேர்தலில் போட்டியிட தயார் நிலையில் வைக்கும் மற்றொரு வேட்பாளர் ஆவார். இது வேட்புமனு பரிசீலனையின்போது ஏற்படும் சட்ட சிக்கல்களைத் தவிர்க்க உதவுகிறது.

ஒருவேளை, கட்சி வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால், டம்மி வேட்பாளர், வேட்பாளர் ஆக்கப்படுவார். அவர் கட்சி சின்னத்தில் போட்டியிடுவார். கட்சி வேட்பாளரின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டால், பரிசீலனைக்குப் பிறகு மாற்று வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெற்றுவிட்டு, டெபாசிட் பணத்தையும் திரும்பப் பெறுவார்.
பொதுவாக, கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரின் துணைவர், குடும்ப உறுப்பினர்கள் மாற்று வேட்பாளர்களாக களமிறக்கப்படுவார்கள். இல்லையெனில், நம்பகமான தங்கள் ஆதரவாளர்களை மாற்று வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்ய வைப்பார்கள்.
தமிழ்நாட்டில் முதன்முறையாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது. ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டார் விஜய். தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தவெக தலைவர் விஜய் கடந்த 30 ஆம் தேதி தாக்கல் செய்தார். இதில், தனக்கு இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள், தன் தந்தை, தாய், மனைவி, மகன் மற்றும் மகளுக்கு கொடுத்துள்ள கடன் தொகை விவரம் உள்ளிட்டவற்றை தெரிவித்துள்ளார். பெரம்பூர் தொகுதியில் தனது வேட்பு மனுவில் எந்தவித காவல்துறை வழக்கும் இல்லை எனத் தெரிவித்து இருந்தார்.
பின்னர் கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த விஜய், இந்த வழக்குடன் சேர்த்து 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கையும் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை ஏன் பெரம்பூர் மனு தாக்கலில் அவர் குறிப்பிடவில்லை என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து புதிய பிரமாணப்பத்திரம் விஜய் தரப்பில் பெரம்பூரில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, கூடுதல் விவரங்களுடன் திருச்சி கிழக்கிலும் விஜய் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விஜய்க்கு மாற்று வேட்பாளராக தவெகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
விஜய்யின் மாற்று வேட்பாளர் சிரஞ்சீவி கையில் ரொக்கமாக ரூபாய் 40,000, அவரது மனைவி அஹானா கையில் ரொக்கமாக ரூ.42,000 உள்ளதாக அவரது பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசையும் சொத்துகளாக சிரஞ்சீவி பெயரில் 1 கோடியே 71 லட்சம், மற்றும், அவரது மனைவி பெயரில் 2 கோடியே 5 லட்சம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அசையா சொத்துகளாக சிரஞ்சீவி பெயரில் 3 கோடியே 05 லட்சம், மற்றும், அவரது மனைவி பெயரில் 68 லட்சம் மதிப்பில் சொத்துகள் உள்ளதாக பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தவெக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
சிங்கப்பெண் அதிரடி படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு.. 2500 புதிய பணியிடங்கள் உருவாகிறது! முதல்வர் விஜய் -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
தூத்துக்குடிக்கு வர இருந்த கப்பல் முதலீடு! கண்டுக்காத தமிழக அரசால்..ஆந்திரா போன மசகான் டாக் நிறுவனம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
கிடைக்கிற கேப்பில் எல்லாம்.. அடிச்சு தூக்கிய விஜய்.. வடக்கின் அஸ்திவாரத்தையே ஆட்ட போகும் பிளான் -
மின் தடை பரிதாபங்கள்.. சென்னைல மட்டும் தங்கத்தில் பியூஸ் கேரியர் இருக்குமோ.. தெறிக்கும் மீம்ஸ்! -
திருச்சியில் வீட்டை விட்டு ஓடி.. லாட்ஜில் காதலனை நம்பி தங்கிய இளம்பெண் .. ஆடிப்போக வைத்த கோலம் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
"எனக்கு சினிமாவில் ஒரே நண்பன் விஜய் தான்!"... அவர் மகன் பற்றி சொன்ன விஷயம்.. ராகவா லாரன்ஸ் ஓபன் -
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’











Click it and Unblock the Notifications