"அந்த பைஃலை எடுங்க".. திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் விசிட்..பரபரப்பு!
திருச்சி: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் மக்கள் மனதிற்கு பிடித்தது போல் ஆட்சி செய்வதாக கட்சியினர் கூறுகிறார்கள். அந்த வகையில் காவல் நிலையங்களில் அவ்வப்போது திடீர் திடீர் என ஆய்வு நடத்தினார்.
அது போல் சென்னையில் கொரோனா வார் ரூம் அமைத்த போதும் அங்கு ஆய்வு மேற்கொண்ட அவர் பொதுமக்கள் ஒருவரின் குறையை கேட்டறிந்து அதற்கு உதவியும் செய்தார்.

வடகிழக்கு பருவமழை
மேலும் வடகிழக்கு பருவமழை காலத்தின் போது வருவாய் துறை அலுவலகத்தில் அமைத்துள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்றார். அங்கு புயல் பாதிப்பு குறித்த ஏற்பாடுகளை கேட்டறிந்தார். மக்கள் பாதுகாப்புக்கான தயார் நிலை குறித்தும் கேட்டறிந்தார். இதுபோல் திடீர் திடீரென ஆய்வு மேற்கொள்வதால் எங்கும் தவறு நேராது என்பது ஸ்டாலினின் கணக்கு.

திமுக ஆட்சி
அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்தை அடுத்து அரசு பேருந்தில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது பெண்களிடம் இலவச பயணம் குறித்து கேட்டறிந்தார். அது போல் காவல் நிலையங்களுக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், காவலர் குடியிருப்புகளில் அவர்களது குடும்பத்தினரிடமும் நலம் விசாரிப்பதை தவறுவதில்லை.

கிண்டி வட்டாட்சியர் அலுவலகம்
கடந்த 5 நாட்களுக்கு முன்னர் கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்தினார். வட்டாட்சிய் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அங்கிருந்த கோப்புகளை கேட்டறிந்தார். பொதுமக்களை எக்காரணம் கொண்டு அலைக்கழிக்கக் கூடாது என அறிவுறுத்தியிருந்தார். பின்னர் அங்கு வந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

திருச்சி மாநகராட்சி அலுவலகம்
இந்த நிலையில் இன்று காலை சென்னையில் தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் ஒரு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு ஆய்வு நடத்த புறப்பட்டார். அதன்படி காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் முன்னறிவிப்பு ஏதுமின்றி திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அவர் திடீர் ஆய்வு நடத்தியதால் அதிகாரிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications