“திருச்சியில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் முதல்வர் ஸ்டாலின்”.. கேஎன் நேரு கொடுத்த அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: "கடந்த தேர்தலின்போது திருச்சியில் மகளிர் உரிமைத்தொகை போன்ற 7 வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அது தேர்தலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதேபோன்று இந்த மாநாட்டிலும் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்" என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் வரும் 9 ஆம் தேதி திமுக மாநில மாநாடு நடைபெறுகிறது. சுமார் 500 ஏக்கரில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் வரை கலந்து கொள்ள உள்ளனர்.

KN Nehru

இந்த மாநாட்டு திடலை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், "முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இதே இடத்தில், பாசனம், மருத்துவம், கல்வி வசதி உள்ளிட்ட 7 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வெற்றி பெற்றார்.

அதேபோல இந்த மாநாட்டிலும் தமிழக நிதி நிலைக்கு ஏற்ப வருங்கால திட்டம் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார். ஏற்கனவே அறிவித்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள். அதேபோன்று புதிய அறிவிப்புகளோடு சிறந்த மாநாடாக இது அமையும். தேர்தல் அறிக்கையில் இருந்து ஏதாவது ஒன்று, இரண்டு அறிவிப்புகளை இங்கு வெளியிடலாம்.

இந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று லட்சம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் விரிவான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது. எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பில்லை. 10 மருத்துவக் குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனைவருக்கும் குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 24 ஆயிரம் வாகனங்கள் வரும் என போலீஸ் சார்பில் கூறப்பட்டுள்ளது. போதுமான வாகன நிறுத்தும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க திமுக மாநாடு. கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து எனக்கு தெரியாது. திமுக தலைவர் ஸ்டாலின் தான் தெரிவிப்பார். முதல்வர் ஸ்டாலின் மாலை 5.30-க்கு மணிக்கு மாநாட்டு திடலுக்கு வருவார்" என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+