வெற்றி பெற்றவர்களை குஷி படுத்தும் திமுக... ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் பாராட்டு விழா
திருச்சி: திமுக சார்பில் போட்டியிட்டு ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.என்.நேரு பிரம்மாண்ட முறையில் செய்து வருகிறார்.
திமுக சார்பில் வெற்றிபெற்ற ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர்கள் ஆளுங்கட்சியான அதிமுக பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக இந்த பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

பாராட்டு விழா
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், மற்றும் ஒன்றிய பெருந்தலைவர்களை கவுரவிக்கும் நோக்கில் அவர்களை அழைத்து பாராட்ட உள்ளார் மு.க.ஸ்டாலின். இதற்காக ஒரு பாராட்டு விழாவையே கூட நடத்தலாம் என அவர் முடிவெடுத்துள்ளார்.

பாராட்டு விழா
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், மற்றும் ஒன்றிய பெருந்தலைவர்களை கவுரவிக்கும் நோக்கில் அவர்களை அழைத்து பாராட்ட உள்ளார் மு.க.ஸ்டாலின். இதற்காக ஒரு பாராட்டு விழாவையே கூட நடத்தலாம் என அவர் முடிவெடுத்துள்ளார்.

அதிர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 11 பேர் திமுகவிற்கு இருந்து அங்கு அதிமுகவை சேர்ந்தவர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராகியுள்ளார். காரணம் திமுகவில் உள்ள ஒருவர் சத்தமின்றி யாருக்கும் தெரியாத வகையில் அதிமுகவுக்கு ஓட்டு போட்டுள்ளார். இதுவரை அந்த உறுப்பினர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

தக்கவைக்க
இதனிடையே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களை தொடர்ந்து தக்கவைக்க என்ன செய்யலாம் என திமுக தலைமை ஆலோசித்த நிலையில், முதற்கட்டமாக அவர்கள் அனைவரையும் அழைத்து பாராட்டு விழா நடத்தலாம் என கே.என்.நேரு ஐடியா கொடுத்துள்ளார்.

ஏற்பாடுகள்
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் ஆலோசனையை கேட்ட ஸ்டாலின் அதற்கு ஓ.கே.சொல்லிவிட்டார். இதையடுத்து திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை நேரு தொடங்கிவிட்டார். இது தொடர்பாக திமுக தலைமையில் இருந்து தேதி குறிப்பிட்டு முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு











Click it and Unblock the Notifications