டீச்சர் மீது லவ்.. ஒரு பக்க காதலால் மோதல்.. கடத்தல் வரை துணிந்த வணக்கம் சோமு.. திகிலில் திருச்சி
வணக்கம் சோமு ஆசிரியையை கடத்திவிட்டதாக கூறப்படுகிறது
Recommended Video
திருச்சி: ஏற்கனவே கல்யாணம் ஆகி, காலேஜ் படிக்கிற அளவுக்கு ஒரு மகளும் உள்ள நிலையில், டீச்சர் மகாலட்சுமி மீது அதிமுக வட்ட செயலாளர் "வணக்கம் சோமு"வுக்கு ஒருதலை காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல்.. இன்று கடத்தல் வரை சென்றுள்ள விவகாரம் திருச்சி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை தந்துள்ளது.
வணக்கம் சோமு - இவர் திருச்சி பிரமுகர். மறைந்த ஜெயலலிதா மீது ஏற்பட்ட அதீத ஈர்ப்பின் காரணமாக 2009-ல் அதிமுகவில் இணைந்தார். கடுமையாக பணியாற்றினார். இவரது செயல்பாடுகளை கண்டு வியந்த தலைமை, திருச்சி மாநகர் மலைக்கோட்டை பகுதி பொருளாளர் பதவியும் அன்று கொடுத்தது.
அப்போதுதான் திருச்சி மாவட்டத்தில் பிரபலம் ஆனார். மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தவர். இப்போது ஒரு டீச்சரை இவர் கடத்திவிட்டார் என்ற புகார் எழுந்துள்ளது. தனியார் பெண்கள் கல்லூரியில் பணியாற்றும் அந்த ஆசிரியை பெயர் மகாலட்சுமி. இவரைதான், வணக்கம் சோமு கடத்தியதாக தெரிகிறது.

பேராசிரியை
திருச்சி மலைக்கோட்டை நயினார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் இந்திரா காந்தி கல்லூரியில் ஆங்கிலதுறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இன்று காலை ஆண்டாள் வீதி பகுதியில் மகாலட்சுமி நடந்து சென்று கொண்டிருந்தபோது ஆம்புலன்சில் காத்திருந்த நபர்கள் பேராசிரியர் மகாலட்சுமியை கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ் சென்றபோது, மகாலட்சுமி அலறி சத்தம் போட்டுள்ளார். ஒரு மணி நேரமாக மகாலட்சுமி இவ்வாறு சத்தம் போடவும், துவரங்குறிச்சி என்ற இடத்தில், அக்கம்பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் அவரை இறக்கி விட்டு கடத்தல்காரர்கள் பறந்துள்ளனர்.

விசாரணை
இதன்பின்னர், அங்கிருந்தபடியே மகாலட்சுமி போலீசுக்கு புகார் சொல்லி உள்ளார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சண்முகவேல் உட்பட போலீசார் மகாலட்சுமியை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, விசாரணையில், வட்ட செயலாளர் வணக்கம் சோமுவுக்கு டீச்சர் மீது ஒரு தலைக்காதல் இருந்துள்ளது. அவர், எங்கெங்கு போகிறாரோ, அங்கெல்லாம் பின்னாடியே சென்று வணக்கம் சோமு தகராறு செய்கிறாராம்.

ஒரு தலை காதல்
சில மாதங்களாகவே டீச்சரிடம் இப்படித்தான் நடந்து கொள்வதாகவும், இந்த ஒரு தலைகாதல் விவகாரத்தால்தான் கடத்தி சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த கடத்தல் விஷயம் பெரிதானதால், டீச்சரை பாதியிலேயே இறக்கிவிட்டு விட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. டீச்சரை கடத்திய சோமுவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதாம். காலேஜில் படிக்கும் அளவுக்கு ஒரு மகளும் இருக்கிறாராம்.

போலீஸ் வலை
இதைப்பற்றியெல்லாம் விசாரிக்கலாம் என்றால், வணக்கம் சோமு-வை இப்போது காணோமாம். அதனால் வணக்கம் சோமுவுக்கு போலீசார் வலைவிரித்துள்ளனர். இவரிடம் விசாரணை நடத்திய பிறகுதான் இந்த விவகாரத்தின் உண்மைதன்மை தெரியவரும். இருந்தாலும், டீச்சரை வணக்கம் சோமு கடத்தியதாக எழுந்துள்ள புகார் திருச்சி அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications