ஸ்ரீரங்கம் கோயிலில் கிருமி நாசினி தெளிப்பு.. கொரோனா வைரஸ் அலார்ட்.. வெறிச்சோடியது திருச்சி
திருச்சி: கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் திருச்சி மாநகராட்சி சார்பில் கோயில் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது திருச்சி மாவட்டம் முழுவதும் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
திருச்சி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், காவல், போக்குவரத்து, கால்நடை பராமரிப்பு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, மாவட்ட கொள்ளை நோய் தடுப்புப் பிரிவு, பள்ளிக் கல்வித்துறை, உயா்கல்வித்துறை, இந்துசமய அறநிலையத்துறை, உணவு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறைகள் 24 மணிநேர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
திருச்சி மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமாக விளங்கும் முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா, புளியஞ்சோலை, பச்சைமலை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் அரசின் மறு உத்தரவு வரும் வரையில் மறு தேதி குறிப்பிடாமல் மூடப்பட்டுள்ளன. அரசின் தடை உத்தரவு தெரியாமல் சுற்றுலாத் தலங்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்த பொதுமக்கள், காதல்ஜோடிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

சமயபுரம் கோயில்
மாவட்டத்தில் பிரதான கோயில்களாகவும், எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், திருவானைக்கா சம்புகேசுவரா் திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட பெரும்பாலான கோயில்கள் பக்தா்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், கோயிலுக்கு வரும் பக்தா்கள் மருத்துவக் குழுவினா் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனா். இதேபோல், தேவாலயங்கள், மசூதிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லை.இதேபோல, திருச்சி காந்திசந்தையும் வெறிச்சோடி காணப்பட்டன. காய்கனிகள் விற்பனையிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

கிருமி நாசினி
திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்துநிலையம், ஆம்னி பேருந்துநிலையம், கோயில்கள், மக்கள் கூடும் இடங்கள் அனைத்திலும் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு அவ்வப்போது சுத்தம் செய்யப்படுகிறது. பேருந்துகளும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. ரயில்வே யாா்டுகள் மற்றும் திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்திலும் 2 மணிநேரத்துக்கு ஒருமுறை என சுழற்சி முறையில் கிருமி நாசினிகள் தெளித்து சுத்தப்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

கிருமி நானிசி தெளிப்பு
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம் சார்பில் கோயில் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது சக்ரத்தாழ்வார் சன்னதி ,தாயார் சன்னதி ,பெருமாள் சன்னதி ஆகிய இடங்களில் பக்தர்கள் வரிசையில் செல்லும் வழியில் உள்ள இடங்கள் மற்றும் கம்பிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது இது இன்று முதல் தினமும் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை தெளிக்கப்படும் என்று மாநகராட்சி உதவி ஆணையர் தெரிவித்தார். இந் நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம் உதவி ஆணையர் வைத்தியநாதன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் டேவிட் முத்துராஜ் , சகாயராஜ் ,சுகாதார மேற்பார்வையாளர் ராஜா மற்றும் மாநகராட்சி துப்புறவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பேருந்து நிலையத்தில் கூட்டம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு விடுதிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் அவரச, அவசரமாக சொந்த ஊா் திரும்பி வருகின்றனா். இதனால், மத்திய பேருந்துநிலையத்தில் அனைத்து வெளியூா் பேருந்துகளிலும் மாணவா்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

புதிய சிகிச்சை மையம்
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு, கூடுதல் வாா்டுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இவைத்தவிர, கள்ளிக்குடியில் உள்ள ஒருங்கிணைந்த காய்கனி விற்பனை மையத்தையும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ரூ.77 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த வணிக வளாக கடைகள் 700-க்கும் மேற்பட்டவை காலியாக உள்ளதால், இவற்றில் 75 படுக்கைகள் கொண்ட தனித் தனி சிகிச்சை மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி விமானநிலையத்துக்கு வரும் வெளிநாட்டு, வெளிமாநில பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் அவா்களை இந்த மையத்துக்கு அழைத்து வந்து 14 நாள் தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க இந்த சிறப்பு மையம் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

அவசரஉதவிக்கு எண்கள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக வங்கிப் பணியாளா்கள், டாஸ்மாக் ஊழியா்கள், மருத்துவமனை ஊழியா்கள், தனியார் நிறுவன ஊழியா்கள் முகக் கவசம் அணிந்து பணியாற்ற தொடங்கியுள்ளனா். மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் மார்ச் 31ஆம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், சளி உள்ளவா்கள் ஆரம்ப நிலையிலேயே அரசு மருத்துவமனைகளுக்கு சென்று உரிய சிகிச்சை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர தொடா்புக்கு: 104, 98434-16694, 94420-38951, 97911-46511 உள்ளிட்ட தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications