கொரோனா.. மளிகைப் பொருட்கள் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வரும்.. கலக்கும் திருச்சி மாநகராட்சி!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: கொரோனா பாதிப்பு காரணமாக திருச்சி மாநகராட்சியில் போன் செய்தால் வீட்டுக்கே மளிகைப் பொருட்கள் வரும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 144 தடை ஏப்ரல் 14 வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Coronavirus: People can get groceries to home by order says Trichy corporation

இந்த நிலையில் திருச்சி மாநகராட்சியில் போன் செய்தால் வீட்டுக்கே மளிகைப் பொருட்கள் வரும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது : 21 நாட்கள் ஊரடங்கு என்பதால் அதனைக் கடைபிடிக்க வேண்டிய நிலையில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த அரசின் உத்தரவினைத் தொடர்ந்து, கொரோனா பரவுதலைத் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் கீழ்க்கண்ட மளிகைக் கடைகளிலிருந்து போனில் ஆர்டர் செய்து, வீட்டிலிருந்தபடியே உரிய விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

கடைகளின் விவரங்கள்:

ஜி.ஆர்.ஒ.மார்ட், தில்லைநகர், திருச்சி. 0431 - 3550509, 90038-22223 தில்லைநகர், உறையூர், புத்தூர், கண்டோன்மென்ட், பாலக்கரை, ஜங்ஷன், அண்ணாமலை நகர், ராமலிங்க நகர், சாஸ்திரி ரோடு, பீம நகர்.

காவேரி சூப்பர் மார்கெட் கிளைகள் 0431-2750032, 984245669, 0431-2510984, 9842990762 / 63 / 69, 0431-2750032, 9842490767, 0431-4000799,9842411154, 9842970711, 0431-4976338,9842433357, 9842990770 திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும்.

பெமினா ஷாப்பிங் மால், திருச்சி 98423 - 66666, 0431-4000610 திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும். ரிலையன்ஸ் மார்கெட், அரியமங்கலம் 9952841428, 0431-2443199, 8778948383, 7010144863 திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும்.

ரிலையன்ஸ் ரீடெய்ல் லிட்., கண்டோன்மென்ட் 9840501685, 0431-4000626, 9095614569 திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும். குமுதம் டிபார்ட்மென்டல் ஸ்டோர் 0431-2457447, 2455447, 4030447, 4542424, 2740507, 2456446, 454022திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும்.

போத்தீஸ், மேலரண் சாலை 0431 - 2703001, 90476 - 66669, 70944-47138, 98946-77583 திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும்.

ஆர்டர் செய்யும் நேரம் - காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.

Recommended Video

    ட்ரோன் மூலம் கொரோனாவை விரட்டும் கடலூர் மாவட்ட நிர்வாகம் - வீடியோ

    முக்கியமாக ஆர்டர் செய்த மறுநாள் டெலிவரி செய்யப்படும் என்று மாநகராட்சி செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+