"சார் தண்ணி அடிச்சா கொரோனா ஓடிருமா" கன்ட்ரோல் ரூமுக்கு போன் போட்ட குடிகாரர்கள்.. திருச்சி அக்கப்போர்

திருச்சியில் தனி கன்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

திருச்சி: "சார்.. தண்ணி அடிச்சால் கொரோனா ஓடிடுதாமே.. அப்படியா.. கொரோனாவுக்கு மருந்து இருக்காமே.. ஒரு குவார்ட்டர் டபுள் மடங்கு விக்கிறாங்க சார்" என்று போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து வரும் நிகழ்வுகள் திருச்சியில் நடந்துள்ளது!

Recommended Video

    ஏன்... எதற்கு... எப்படி? சட்டம் பேசுன தம்பிக்கு போலீஸ் தந்த பதில்- வைரல் வீடியோ

    திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உடலில் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் வெப்பநிலை அளவிடப்பட்டும், சளி, இருமல் உள்ளதா? என ஆய்வு செய்திட திருச்சி கள்ளிக்குடியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர்.

    coronavirus: trichy control room 24 hours service for public

    தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். இதைதவிர, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் குறித்தும், சளி, இருமல் தொந்தரவால் சிரமப்படுபவர்கள், கொரோனா தொற்று பரிசோதனை செய்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் சுற்றுகிறார்களா? என்றும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட கலெக்டர் ஆபீசில் ஒரு கன்ட்ரோல் ரூம் செயல்பட்டு வருகிறது.. இந்த ஆபீஸ் 24 மணி நேரமும் செயல்படுகிறது.

    பொதுமக்கள் புகார் தெரிவிக்க போன் நம்பரும் தரப்பட்டுள்ளது.. ஆனால் அந்த நம்பருக்கு மக்கள் போன் பண்ணி கொண்டே இருக்கிறார்களாம்.. "சார்... நான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கேன்.. நான் என்ன செய்யணும்' என்று கேள்விகளை எழுப்புகிறார்கள். இன்னும் சிலர், "என் பக்கத்து வீட்டுக்காரர் எப்ப பார்த்தாலும் இருமிட்டே இருக்காரு சார்.. எனக்கு பயமா இருக்கு" என்கிறார்களாம்.

    இதெல்லாம்கூட பரவாயில்லை ஒருசில குசும்பர்கள் போனை போட்டு, "ஹலோ, கொரோனா கன்ட்ரோல் ரூமா" என்று கேட்கவும் ஊழியர்கள் ஆமாம், என்ன உதவி வேணும் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளனர்.. அதற்கு "ஓ.. ஒன்னுமில்லை..என்று வைத்து விடுகிறார்களாம்.

    இதில் ஒரு நபர் போன் செய்து, "சார்.. கொரோனாவுக்குதான் மருந்து இருக்காமே.. தண்ணி அடிச்சால் சரியா போயிடும்னு சொல்றாங்க.. என் ஃப்ரண்டே அப்படித்தான் சொல்கிறான். உண்மையா சார்? என்று கேட்டுள்ளார். இதைவிட பெரிய காமெடி ஒரு பெண் போன் செய்துள்ளார், "சார்.. எங்க கிராமத்தில் கொரோனாவுக்கு பயந்து டாஸ்மாக் மூடிட்டாங்க.. ஆனா சந்துக்கடையில ஒரு குவார்ட்டரை டபுள் மடங்கு விக்கிறாங்க, அதை வந்து கொஞ்சம் தடுங்க சார்" என்று கூறியுள்ளார். இப்படி அழைப்புகள் வருவதால் அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் விழிக்கிறோம் என்கிறார்கள் ஊழியர்கள்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+