திருச்சியில் இருவருக்கு கொரோனோ அறிகுறி... அரசு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை
திருச்சி: மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த இருவருக்கு கொரோனோ அறிகுறி தென்பட்டதால் அவர்கள் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிகளில் ஒரு குழந்தை உட்பட இரண்டு பேருக்கு கொரோனோ அறிகுறி தென்பட்டுள்ளது. இதனை திருச்சி விமான நிலைய சிறப்பு மருத்துவ குழுவினர் ஆய்வின் மூலம் கண்டறிந்தனர். இதையடுத்து கொரோனோ அறிகுறி இருந்த அந்த 3 வயது குழந்தை மற்றும் 46 வயது நபர் திருச்சி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்கள் தனி வார்டில் (ஐசோலேஷன் பிரிவில்) அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சோதனை முடிவுகள் முழுவதுமாக கிடைத்த பின்னரே கொரோனோ பாதிப்பா என்பதை பற்றி ஊர்ஜிதம் செய்ய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதனிடையே கொரோனோ அறிகுறி தானே தவிர இன்னும் கொரோனோ என உறுதிசெய்யவில்லை என்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று முதல், மலேசியா மற்றும் இந்திய குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே விமானத்தில் திருச்சிக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாவிற்காக மலேசியா வழியாக இந்தியாவிற்கு வெளிநாட்டினர் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொழில் காரணமாக பயணம் செய்பவர்களுக்கும் (மலேசிய தூதரகத்தின் அனுமதி பெற்ற பின்பு) மட்டுமே இந்தியா வர அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மலேசியா வழியாக இந்தியாவிற்கு வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications