லாட்ஜ்ஜில் விபச்சாரம்.. ரூமுக்குள் நுழைந்தால் "அவராமே".. திகைத்த திருச்சி போலீஸ்.. பாவம் அந்த பொண்ணு
திருச்சி: 17 வயது சிறுமியை லாட்ஜ்ஜூக்கு அழைத்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார் ஒரு நபர்.. இது தொடர்பான விவகாரம் திருச்சியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் ஒரு லாட்ஜ் உள்ளது.. இங்கு நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்.. அன்றைய தினம் இரவு, ஒரு சிறுமியை தன்னுடன் ரூமுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் இதுபற்றி கண்டோன்மெண்ட் மகளிர் போலீசக்கு தகவல் கொடுத்தனர்.. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவல்லி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட லாட்ஜூக்கு திரண்டு வந்தனர்..

விபச்சாரம்: நள்ளிரவு என்றும் பாராமல், அந்த ரூமுக்குள் நுழைந்து அதிரடி சோதனையை மேற்கொண்டனர்... ரூமுக்குள் அந்த சிறுமியும், இளைஞரும் இருந்தனர்.. போலீசாரை பார்த்ததுமே, இருவருமே அதிர்ந்து நின்றார்கள்.. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்... அப்போதுதான், அந்த சிறுமியை இளைஞர் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது... இதற்கு பிறகு சிறுமியை தனியாக அழைத்து விசாரித்தனர்.. அவர் சொன்னதை கேட்டு, போலீசார் அதிர்ந்து நின்றுவிட்டார்கள்.. துவாக்குடி பகுதியை சேர்ந்தவராம் அந்த சிறுமி.. இப்போது 17 வயதுதான் ஆகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சிறுமி 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்... அப்போது, அவருடைய அப்பா இறந்துவிட்டாராம்.. இதனால் அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துவந்துள்ளார்.. கடந்த 7-4-2021 அன்று அவரை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்ற 29 வயது நபருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.. சிறுமியின் தாய், இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.. அப்போது இந்த சிறுமிக்கு 15 வயதுதான் ஆகியிருந்தது.. பாலமுருகனும் 15 வயது சிறுமி என்றும் பாராமல், 2 வருடங்களாக அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஆனால், சிறுமி ஏன் கர்ப்பம் தரிக்கவில்லை என்று பாலமுருகன் பிரச்சனையை கிளப்பி உள்ளார்..

பாலியல் டார்ச்சர்: கணவர் தொல்லைக்கு நடுவில், மாமியார் கொடுமையும் சேர்ந்து கொண்டது.. அந்த மாமியார் பெயர் செல்லம்மாள்.. இதனால் மனம் நொந்துபோன சிறுமி, கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி தன்னுடைய அம்மா வீட்டுக்கு அழுதுகொண்டே வந்துவிட்டார்.. இதனால் சிறுமியின் தாய் மனம் நொந்துபோனார்.. காரணம், அவருக்கு ஏற்கனவே கடன் நிறைய இருந்தது.. வங்கியிலும் கடன் வாங்கியிருந்தார்.. அதனால், கடனை அடைப்பதற்காக மகளை வேலைக்கு அனுப்பினார்.. திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெரு 4-வது குறுக்கு சந்தில் வசித்து வரும் முத்து என்பவரின் மனைவி ரமீஜா பானு என்பவரிடம் சிறுமியை வேலைக்கு அனுப்பியிருக்கிறார்..
ரமீஜா பானுவுக்கு 50 வயதாகிறது.. இவர் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருகிறார்.. அதனால் சிறுமியையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் மலையன்விளையை சேர்ந்த கிறிஸ்டல் ராஜ் என்பவர் திருச்சிக்கு வந்திருக்கிறார்.. அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கும்போதுதான், சிறுமியை முதன்முறையாக அழைத்துச்சென்று பாலியல் கொடுமை செய்துள்ளார். மேலும் இதுபோல் 15 முறைக்கு மேல், பெயர் விவரம் தெரியாத கஸ்டமர்களிடம் ரமீஜாபானு அந்த சிறுமியை பாலியல் தொழிலுக்கு அனுப்பியுள்ளார்..
பாலியல் தொழில்: விபச்சாரம் செய்வதற்காக சிறுமியை லாட்ஜூக்கு அழைத்து சென்றால், வேலை முடியும் வரை அந்த லாட்ஜ்க்கு வெளியேயே ரமீஜா பானு வெயிட் பண்ணி கொண்டிருப்பாராம்.. அங்கேயே காத்திருந்து, அதற்கு பிறகு, சிறுமியை கையோடு அழைத்து சென்றுவிடுவாராம்.. கஸ்டமர்களிடம் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் வாங்கிவிடுவாராம் ரமீஜாபானு.. ஆனால், இதில் சிறுமிக்கு ரூ.1,000 மட்டுமே கொடுத்துள்ளார்.. இதனால் சிறுமிக்கு பலமுறை உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது.. உடம்பு சரியில்லை என்று சிறுமி சொன்னாலும், ரமீஜா பானு விடுவதில்லையாம்..
"உன் வீடியோ என்கிட்ட இருக்கு" என்று மிரட்டி மிரட்டியே அவரை தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்திருக்கிறார்.. அப்படித்தான், நேற்று முன்தினம் இரவும் கிறிஸ்டல்ராஜ் திருச்சி லாட்ஜில் தங்கி இருந்தபோது, சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.. சிறுமியை ஆட்டோவில் அழைத்து சென்று, மறுபடியும் அழைத்து வந்து விட்டதாகவும் சிறுமி போலீசாரிடம் ஒன்றுவிடாமல் கூறியுள்ளார். இதற்கு பிறகு, பிரபின் கிறிஸ்டல்ராஜிடம் போலீசார் விசாரித்தனர்.. அப்போதுதான் தெரிந்தது அவர் ஒரு பத்திரிகைகாரராம்.. கடந்த 15 வருடங்களாக ஒரு டிவி சேனலில் ரிப்போர்ட்டராக வேலை பார்த்து வந்திருக்கிறார்.. இப்போது ஒரு பிரபல மாதாந்திர பத்திரிகையில் செய்தியாளராக வேலைபார்த்து வருவது தெரியவந்தது...
ரமீஜா பானுவுடன் சேர்ந்து கொண்டு, பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்களது வாழ்க்கையை அவர் சீரழித்ததும், அத்துடன், அந்த சிறுமியை அவர் கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.. இறுதியில், சிறுமியை மீட்ட போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காப்பகத்தில் ஒப்படைத்தனர்... இந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் போலீசில் புகார் தந்தனர்..
சிறுமிக்கு கல்யாணம்: இறுதியில், சிறுமியை கல்யாணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக பாலமுருகன் மீதும், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபின் கிறிஸ்டல் ராஜ் மீதும், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக ரமீஜாபானு மீதும் போலீசார் போக்சோ + விபச்சார தடுப்பு + விபச்சார தடுப்பு + குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்...பிரபின் கிறிஸ்டல் ராஜ், ரமீஜாபானுவை போலீசார் கைது செய்துள்ளனர்.. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், இந்த சம்பத்தில் முதல் குற்றவாளி யார் தெரியுமா? சிறுமியின் அம்மாதான்.. விபச்சார தொழிலில் மகளை ஈடுபடுத்தியதே அவர்தானாம்.. 15 வயது குழந்தைக்கு கல்யாணம் செய்ததும் இந்த அம்மாதான்.. குடும்ப கடனை, மகளின்மீது திணித்ததுடன், ரமீஜா பானு விபச்சாரம் செய்கிறார் என்று தெரிந்தும் அவரிடம் கொண்டுபோய் மகளை ஒப்படைத்ததும், இந்த அம்மாதான்.. இவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.. 15 வயது சிறுமி கர்ப்பம் தரிக்காததால், கொடுமைப்படுத்திய மாமியார் செல்லம்மாளையும் போலீசார் தூக்கி ஜெயிலில் வைத்துள்ளனர்..!!!












Click it and Unblock the Notifications