"கருணாநிதி".. அஜித் "தில்".. டக்குனு கை தட்டிய ரஜினி.. அதிர்ந்த அரங்கம்.. இப்ப சுத்துது இந்த வீடியோ
திருச்சி: நடிகர் அஜித்திடம், திமுக அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை இணையத்தில் வலுத்து வரும்நிலையில், இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத்தும் இதே கோரிக்கையை விடுத்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரம் முன்புள்ள ஈவெரா சிலையை அகற்றியது தொடர்பான வழக்கில் திருச்சி கோர்ட்டுக்கு இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் ஆஜராக வந்திருந்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசினார்.. அதன் சுருக்கம்தான் இது:

திராவிட சித்தாந்தம்: ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்பு, அரசு நிலத்தை ஆக்கிரமித்து பெரியார் சிலையை வைத்திருக்கிறார்கள்.. திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்பவெல்லாம் இதுபோன்ற திராவிட சித்தாந்தங்களை பரப்பும் வகையில், சிலைகள் அமைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. அதனால், அதை உடனடியாக அகற்ற வேண்டும்.
திருச்சியில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தவிருக்கும், "வள்ளலார்- 200, வைக்கம்- 100" என்ற விழாவுக்கு, தமிழக அரசு தடையை விதிக்க வேண்டும்... வள்ளலார், நாத்திகம் பேசினார் என்பதை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் யார் நிரூபித்தாலும்சரி, நிரூபித்தால், ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்க தயாராக இருக்கிறேன்.
துரைமுருகன்: நடிகர் அஜித் பற்றி அமைச்சர் துரைமுருகன் பேசியதை ஏற்க முடியாது.. அது கண்டிக்கத்தக்கது.. அதனால், உடனடியாக அஜித்திடம் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும். கருணாநிதி காலத்தில் இருந்தே, திமுகவினர் அஜித் மீது வன்மத்துடன் இருக்கிறார்கள்..
ஆகஸ்ட் 20ம் தேதி திமுக நடத்தும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மக்களை திசை திருப்பும் விஷயமாகவே உள்ளது.. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னது யார்? இப்படி ஆட்சியை பிடிக்க மக்களுக்கு பொய்யான வாக்குறுதியை தந்தது யார்? அமைச்சர் உதயநிதி மக்களை ஏமாற்றி விட்டனர்.. நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் டாக்டராகும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே நீட் தேர்வை காரணம் காட்டி, மாணவர்கள் தற்கொலைக்கு துாண்டப்படுகின்றனர்.
அஸ்வினி கைது: இந்தியா முழுக்க நீட் தேர்வு நடந்துட்டுதானே இருக்கு? அப்படியிருக்கும்போது, வேறு எந்த மாநிலத்திலுமே மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை.. தமிழகத்தில்தான் இந்த கொடுமை நடக்கிறது.. காரணம், நீட் தேர்வை அரசியலாக்கி, மாணவர்களை காவு கொடுத்து வருகின்றனர்.. திமுக ஆட்சியை குறைசொன்னது குற்றத்துக்காக, அஸ்வினி என்ற பெண்ணை கைது செய்திருக்கிறார்கள் என்றார் அர்ஜூன் சம்பத்.
முன்னதாக, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அமைச்சர் துரைமுருகன், நடிகர் அஜித் பற்றிய கேள்விக்கு, அஜித் யாரு என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்வியால் அஜித் ரசிகர்கள் கொந்தளித்து போயிருக்கிறார்கள். எனவே, அமைச்சர் துரைமுருகனின் பேச்சுக்கு எதிராக அஜித்தின் வீடியோ ஒன்றையும் இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.

கருணாநிதி: "பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா" என்ற நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் முதல் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர் இந்த விழாவில் "அரசியலுக்கு வர வேண்டும் என்ற கட்டாயப்படுத்த வேண்டாம்" என்று நடிகர் அஜித், அன்று கலைஞர் கருணாநிதி முன்னிலையில் பேசிய வீடியோ பதிவுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பேசிய அத்தனை பேருமே கலைஞர் கருணாநிதி குறித்து புகழ்ந்து பேசியிருந்தனர். ஆனால், நடிகர் அஜித் மட்டும், அதற்கு நேர்மாறாக பேசியிருந்தார். "எங்களுக்கு அரசியல் வேண்டாம், அரசியலுக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தவும் வேண்டாம்" என்று பேசியிருந்தார். இந்த பேச்சை கேட்ட கருணாநிதியின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரஜினிகாந்த் முதல்நபராக எழுந்து நின்று கைத்தட்டினார்.
வீடியோ பதிலடி: துரைமுருகனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அஜித் கருணாநிதி நிகழ்ச்சியில் பேசிய வீடியோ பதிவை வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். அத்துடன் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து கொண்டிருக்கிறது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications