திருச்சியிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள்.. ஊருக்கு செல்வோர் கவனத்துக்கு!
திருச்சி: தீபாவளி பண்டிகையையொட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநகர போலீசார் 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்தனர். இந்த தற்காலிக பேருந்து நிலையங்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கின.
தீபாவளியை முன்னிட்டு சென்னையைப் போல் திருச்சியலும் கூட்டநெரிசல் காரணமாக மன்னார்புரம் பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்படுகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும் வெளி மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
27-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை யொட்டி, திருச்சியில் இருந்து சொந்த ஊருக்கு குடும்பத்துடன் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதற்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

மதுரை பேருந்துகள்
இதனால், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநகர போலீசார் 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்தனர். இந்த தற்காலிக பேருந்து நிலையங்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கின. அங்கிருந்து வெளிமாவட்டத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து புறப்பட்டு சென்றன.

மன்னார்புரம் ரவுண்டானா
இதில் தஞ்சாவூர் வழித் தடத்தில் செல்லும் பேருந்துகள் திருச்சி சோனா மீனா தியேட்டர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணி மனை முன்பிருந்து இயக்கப்பட்டன. புதுக்கோட்டை மற்றும் மதுரை வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் மன்னார்புரம் ரவுண்டானாவில் இருந்து இயக்கப்பட்டன.

தென்மாவட்ட பேருந்துகள்
தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டையில் இருந்து திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசு பேருந்துகள் மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி மன்னார்புரத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும். மன்னார் புரம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு பயணிகள் சென்றுவரும் வகையில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

போலீசார் பாதுகாப்பு
இதர வழித்தடங்களுக்கு செல்லும் பேருந்துகள் எவ்வித மாற்றமும் இன்றி வழக்கம் போல திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தே புறப்பட்டு சென்றன. வருகிற 30-ந் தேதிவரை இந்த தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படும். தற்காலிக பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள் ளனர். திருச்சி மாநகராட்சி மூலம் நிழற்குடை, குடிநீர், பொதுக்கழிப்பிட வசதி, ஒலி பெருக்கி மூலம் தகவல்களை தெரிவித்தல் போன்ற ஏற்பாடு களும் செய்யப்பட்டுள்ளன.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications