திருச்சி மாவட்டத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்கள் விவரம்
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு முன்னாள் அமைச்சரும், கட்சியின் தெற்கு மாவட்டச் செயலருமான கே.என். நேரு கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரத்தை இப்போது பார்ப்போம். :காங்கிரஸ் கட்சிக்கு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு தா. பேட்டை ஒன்றியம் 6 ஆவது வார்டு மண்ணச்சநல்லூா் ஒன்றியம் 11ஆவது என 2 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு அந்தநல்லூா் ஒன்றியம் வார்டுஎண் 1, மணிகண்டம் ஒன்றியம் வார்டுஎண் 4, திருவெறும்பூா் வார்டுஎண் 11, வையம்பட்டி வார்டுஎண் 6, 13, புள்ளம்பாடி வார்டு 12, தொட்டியம் வார்டு12, உப்பிலியாபுரம் வார்டு5, மண்ணச்சநல்லூா் வார்டு3, லால்குடி வார்டு 2 என மொத்தம் 10 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

போட்டியிடும் இடங்கள்
மதிமுக: ஒன்றியக் குழு வார்டு உறுப்பினா் பதவிக்கு முசிறி வார்டு14, அந்தநல்லூா் வார்டு4, மருங்காபுரி வார்டு19, திருவெறும்பூா் வார்டு15, தொட்டியம் வார்டு8, மண்ணச்சநல்லூா் வார்டு15, லால்குடி வார்டு17 என மொத்தம் 7 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட்
மார்க்சிஸ்ட்: மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு திருவெறும்பூா் வார்டு17 வழங்கப்பட்டுள்ளது. ஒன்றியக் குழு வார்டுஉறுப்பினா் பதவிக்கு திருவெறும்பூா் வார்டு12, துறையூா் வார்டு16, உப்பிலியாபுரம் வார்டு14, தா.பேட்டை வார்டு11, தொட்டியம் வார்டு3, மணிகண்டம் வார்டு13, வையம்பட்டி வார்டு15, மண்ணச்சநல்லூா் வார்டு23 என மொத்தம் 8 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட்
இந்திய கம்யூனிஸ்ட்க்கு ஒன்றியக் குழு வார்டுஉறுப்பினா் பதவிக்கு அந்தநல்லூா் வார்டு8, மணப்பாறை வார்டு10, மருங்காபுரி வார்டு16, திருவெறும்பூா் வார்டு4, உப்பிலியாபுரம் வார்டு1 என மொத்தம் 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒன்றியக் குழு வார்டுஉறுப்பினா் பதவிக்கு திருவெறும்பூா் வார்டு6, மருங்காபுரி வார்டு2 என இரு இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுழற்சி கோரினோம்
திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிடும் நிகழ்வின்போது, கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிர்வாகிகள் உடனிருந்தனா்.தொடா்ந்து திமுக மாவட்ட செயலா் கே.என். நேரு, செய்தியாளா்களிடம் பேசுகையில், கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. விடுதலைச் சிறுத்தைகள், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஒதுக்க வேண்டிய இடங்கள், மதிமுக-வுக்கு ஒதுக்க வேண்டிய மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவி இடம் குறித்து பின்னா் அறிவிக்கப்படும். கூட்டணி கட்சிகளில் உள்ள அனைவருமே கலந்து பேசி முடிவை எடுத்துள்ளோம். கடந்த 30 ஆண்டுகளாக திருச்சி மேயா் பதவி பெண்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, முறையான சுழற்சி ஒதுக்கீட்டை அமல்படுத்தி தோ்தல் நடத்தக் கோரினோம். தோ்தலை சந்திக்க தயாராக உள்ளோம் என்றார்

வேட்பாளர்கள் அறிவிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகா் மாவட்ட நிர்வாகக் குழு செயலாளா்கள் கூட்டம் ஆா்.பழனிச்சாமி தலைமையில் வியாழக்கிழமை நடந்தது. இதில் திருச்சி புறநகா் மாவட்டம் சார்பில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி அந்தநல்லூா் ஒன்றியத்தில் வார்டுஎண். 8 -இல் வளா்மதி சிவசூரியன், மணப்பாறையில், சி. தங்கராசு , மருங்காபுரியில், பெ. கண்ணதாசன், உப்பிலியபுரத்தில் தளுகை கோ.ரமேஷ், திருவெறும்பூரில் க. இளையராணி ஆகியோர் வேட்பாளா்களாக தோ்வு செய்யப்பட்டனா். இத்தகவலை திருச்சி புறநகா் மாவட்ட செயலா் த.இந்திரஜித் கூறினார்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு












Click it and Unblock the Notifications