மூத்த அரசியல்வாதி.. திமுகவின் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் உடல் நலக்குறைவால் திருச்சியில் மரணம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் உடல் நலக்குறைவால் திருச்சியில் காலமானார்.

என். செல்வராஜ் திமுகவில் இருக்கும் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1944ம் ஆண்டு துறைமங்கலத்தில் பிறந்தவர். நீண்ட நாட்களாக திமுகவில் உறுப்பினராக இருந்தவர். இவருக்கு தற்போது 75 வயதாகிறது.

DMK former Minister Selvaraj dies at the age of 75

திருச்சி மாவட்ட தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளராக இவர் இருந்துள்ளார்.1987 முதல் 1993 வரை இவர் தி.மு.க மாவட்ட செயலாளராக இருந்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக 1980-84 ஆண்டுகளில் இருந்தார். அதேபோல் தமிழக சட்டசபையிலும் அமைச்சராக திமுக ஆட்சியில் இருந்துள்ளார்.

செல்வராஜ் தி.மு.க சார்பில் 2006 ஆண்டு முசிறி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பின் தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக 2006 முதல் 2011வரை இருந்தார்.

அ. தி. மு.க. வேட்பாளரான பூனாட்சியை 10,927 வாக்குகளில் தோற்கடித்து இவர் அமைச்சரானார். கடந்த 2016ல் இவர் அதிமுகவில் இணைந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

இன்று மாலை இவர் உடல் மோசமாகவே மருத்துவர்கள் இவரை பரிசோதித்தனர். இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் செல்வராஜ் உடல் நலக்குறைவால் திருச்சியில் காலமானார். இவரது மறைவிற்கு அதிமுக, திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+