உதயநிதி அழைத்து வரப்பட்ட போலீஸ் வாகனத்தை வழிமறித்த திமுகவினர்! திருச்சியில் எகிறிய டென்ஷன்
திருச்சி: விஜய் குறித்து அவதூறாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் தஞ்சை அழைத்து செல்லப்பட்டார். அப்போது திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியை உதயநிதி ஸ்டாலின் வாகனம் கடந்து சென்றபோது, அங்கிருந்த திமுக தொண்டர்கள் சிலர், அவர் பயணம் செய்த காவல் துறை வாகனத்தை வழிமறித்து நிறுத்த முயன்றனர்.
இதனால், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், தொண்டர்களைத் தடுத்து நிறுத்தி உதயநிதி ஸ்டாலினின் வாகனத்தை அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

வழிமறித்து நிறுத்த முயன்றனர்
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின், சென்னையில் இருந்து தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். சென்னையில் இருந்து போலீஸ் வேனில் உதயநிதி தஞ்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
உதயநிதி அழைத்து செல்லப்பட்ட போலீஸ் வாகனத்தை பின் தொடர்ந்து திமுகவினரும் தங்கள் சொந்த வாகனங்களில் அணி வகுத்து வந்தனர். சில இடங்களில் திமுகவினர் உதயநிதி கைதை கண்டித்து சாலையோரம் திரண்டு இருந்தனர். திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாகனம் கடந்து சென்றபோது, அங்கிருந்த திமுக தொண்டர்கள் சிலர், அவர் பயணம் செய்த காவல் துறை வாகனத்தை வழிமறித்து நிறுத்த முயன்றனர்.
தீ வைத்து கொளுத்தினர்
இதனால், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், தொண்டர்களைத் தடுத்து நிறுத்தி உதயநிதி ஸ்டாலினின் வாகனத்தை அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, அவரது வாகனம் சுங்கச்சாவடியைக் கடந்து தனது பயணத்தைத் தொடர்ந்தது. இந்த நிகழ்வு காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் விஜய்யின் உருவபொம்மையை தீ வைத்து கொளுத்தி திமுகவினர் போராட்டம் செய்தனர்.
உதயநிதி ஸ்டாலின் தஞ்சை தெற்கு காவல் நிலையம் அழைத்து செல்லப்படுவார் என்று கூறப்பட்டதால், போலீஸ் ஸ்டேஷன் முன்பாக ஆயிரக்கணக்கான திமுகவினர் திரண்டு இருந்தனர். ஆனால் திடீர் திருப்பமாக பிளானை மாற்றிய போலீஸார் செங்கிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இதனை அறிந்த திமுகவினர் செங்கிப்பட்டி காவல் நிலையம் முன்பாக குவியத்தொடங்கினர்.
உதயநிதி ஸ்டாலினிடம் போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில் செங்கிப்பட்டி காவல் நிலையம் முன்பாக ஆயிரக்கணக்கான திமுகவினர் காவல் நிலையம் முன்பாக குவிந்து இருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்படும் வரை இங்கு இருந்து கலைந்து செல்ல மாட்டோம் என தொடர்ந்து தவெக அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக முழக்கமிட்டபடி இருக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications
