பாஜகவில் சேர்ந்தாரே திருச்சி சிவா மகன் சூர்யா.. பஸ் கடத்தல், பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் தனது கார் மீது தனியார் பேருந்து மோதியதால் கார் சேதமடைந்ததாக கூறி அந்த நிறுவனத்தின் வேறு பேருந்து கடத்தியதாக திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா கைது செய்யப்பட்டார்.

Recommended Video

    திருச்சி சிவா மகன் சூர்யாசிவா கைது - காவல் நிலையம் முன்பு காவல் துறையினர் குறிப்பு - வீடியோ

    திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக உள்ள திருச்சி சிவா, திமுகவின் மாநிலங்களவை எம்பியாக உள்ளார. இவர் மத்திய மண்டலத்தில் திமுகவின் முக்கியத் தலைவராவார்.

    இந்த நிலையில் இவரது மகன் சூர்யா சிவா கடந்த மே மாதம் சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதனால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.

    சட்டசபை தேர்தல்

    சட்டசபை தேர்தல்

    திருச்சி சிவாவின் மகன் சூர்யா, கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்து நேர்காணலில் பங்கேற்றார். ஆனால் அவருக்கு திமுக தலைமை சீட் கொடுக்கவில்லை. திமுகவில் முக்கிய தலைவராக உள்ள தனது தந்தைக்கும் தனக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை என்பது சூர்யாவின் ஆதங்கம்.

    அருண் நேரு

    அருண் நேரு

    கே என் நேரு மகன் அருண் நேரு உள்ளிட்டோர் அரசியலுக்கு வந்த போதிலும் தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது சூர்யாவின் ஆதங்கமாக இருந்தது. இந்த நிலையில்தான் பாஜகவில் சேருவதற்கு முன்னரே கருணாநிதியுடன் சிறிய வயதில் இருக்கும் வாட்ஸ் ஆப் டிபியின் படத்தை நீக்கிவிட்டு, பிரதமர் மோடியின் படத்தை வைத்து தனது கட்சி தாவலை சூசகமாக சொல்லியிருந்தார் சூர்யா.

    பாஜகவில் ஐக்கியம்

    பாஜகவில் ஐக்கியம்

    திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைந்துவிட்டால் அது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுக்கும் என்பதால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடந்தன. ஆனால் அவர் கடந்த மே மாதம் பாஜகவில் ஐக்கியமானார். அவருக்கு பாஜகவின் மாநில ஓபிசி அணியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    கைது

    கைது

    இந்த நிலையில் பாஜகவில் இணைந்த பிறகு சிவா மகன் சூர்யா, இன்னும் நிறைய பேர் திமுகவிலிருந்து பாஜகவுக்கு வருகை தருவர் என தெரிவித்திருந்தார். மேலும் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். இந்த நிலையில் திருச்சி சிவா மகன் சூர்யாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    திருச்சி சிவா மகன் ஏன் கைது

    திருச்சி சிவா மகன் ஏன் கைது

    சூர்யாவின் கார் மீது தனியார் பேருந்து மோதியதால் சேதமடைந்ததாக கூறி தனியார் நிறுவனத்தின் வேறு ஒரு பேருந்தை கடத்தி சென்றதாகவும் அத்துடன் பேருந்து உரிமையாளரை ரூ 5 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. பேருந்து உரிமையாளரின் புகாரின் பேரில் திருச்சி சிவா மகன் சூர்யாவை கண்டோன்மென்ட் போலீஸார் கைது செய்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+