ஜோசியம் தெரியாது...தேர்தல் அறிவிப்பு தேதி மட்டும் கணிப்போம்... இது திமுக ஸ்டைல்
திருச்சி : பிப்ரவரி 28 ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருச்சி மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அலுவலகம் திறப்பு விழா முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியில், தேர்தல் ஆணையம் தொடர்ந்து பல புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது. தி.மு.க விற்கு வரும் தேர்தல் சவாலாக இல்லை. பல தேர்தலை சந்தித்தவர்களுக்கும் சட்டப்பூர்வமான அறிவுரைகள் தேவைப்படுகிறது. எனவே வழக்கறிஞர்களை வைத்து பல முன் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறோம். கமல், தி.மு.க கூட்டணியில் இணைவாரா என்பது குறித்து எங்களுக்கு ஜோசியம் தெரியாது.
தி.மு.க ஏற்கனவே ஆட்சியில் இருந்த போதும் முரண்பட்ட கொள்கை கொண்ட கட்சியினர் மத்தியில் ஆட்சியில் இருந்துள்ளனர். இருந்தபோதும் நாங்கள் சிறந்த ஆட்சியை தந்துள்ளோம். வரும் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தாலும் சிறந்த முறையில் ஆட்சி செய்வோம்.

மத்தியில் இருப்பவர்களோடு கூட்டாட்சி செய்ய அறிவு கூர்மை இருந்தால் போதும். ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் தான் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை சாத்தியமாகும். தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு அவரை விடுதலை செய்யும் தைரியம் இல்லை.
பிப்ரவரி 28 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்க உள்ளார்கள். அது குறித்து நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் 20 நாட்களே உள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications