திமுகவிற்கு வெறும் ஐந்து வாக்குகள்.. ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவினரே வாக்களிக்காத ட்விஸ்ட்
திருச்சி: திமுக இந்த முறை தோல்வியை சந்தித்து வலுவான எதிர்க்கட்சியாக வந்துள்ளது என்றாலும், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் வெறும் ஐந்து வாக்குகளே வாங்கியிருப்பது திமுகவினரையே ஆடிப்போக வைத்துள்ளது. ஏனெனில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 14 நிர்வாகிகளை திமுக நியமித்திருந்தது. அவர்கள் ஓட்டுப்போட்டிருந்தாலே 14 வாக்குகள் கிடைத்திருக்கும். ஆனால் அந்த 14 வாக்குகளில் கூட ஐந்து தான் விழுந்திருக்கிறது என்பது தான் பெரிய பேசுபொருளாக மாறி உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவினரே அவர்களின் கட்சிக்கு வாக்களிக்கவில்லையா? என திகைப்புடன் மக்கள் சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பி வருகிறார்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் மொத்தம் 2,87,027 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் 400-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தமாக 2,55,293 பேர் வாக்களித்துள்ளனர். இந்தத் தொகுதியில் தவெக வேட்பாளர் ரமேஷ் 1,03,235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும், திமுகவின் துரைராஜ் 69,645 வாக்குகளும், அதிமுகவின் மனோகரன் 65,819 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் த.வெ.க வேட்பாளர் ரமேஷ் சுமார் 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை வீழ்த்தியிருக்கிறார்.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், இளைஞரணி நிர்வாகி, மகளிரணி நிர்வாகி என தலா 14 பேரை நியமித்து இருந்தது திமுக . ஆனால் ஸ்ரீரங்கத்தில் உள்ள 91 ஆவது வாக்குச்சாவடியில் அக்கட்சிக்கு வெறும் 5 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதாவது, அவர்களின் கட்சியினரே அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து, திமுக நிர்வாகிகள் பதில் அளிக்கையில் கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்களே வாக்களிக்கவில்லையா அல்லது வேறு ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள்.
ஸ்ரீரங்கம் தொகுதி- மொத்த ஓட்டுகள் - 2,87,027
பதிவானவை - 2,55,328
செல்லாத ஓட்டு - 343
நோட்டா - 929
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:
ரமேஷ் (த.வெ.க.) - 1,03,235
எஸ்.துரைராஜ் (தி.மு.க.) - 69,645
ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.) - 65,819
எம்.தர்மராஜ் (நா.த.க.) - 11,026
ஏ.விஜய் (அ.இ.பு.த.ம.மு.க.) - 438
என்.முரளி (த.வா.க.) - 405
ஆர்.ரமேஷ் (சுயே) - 404
எம்.அல்லிமுத்து (பகுஜன் சமாஜ் கட்சி) - 371
தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் தலா 65,000 முதல் 70,000 வாக்குகளுக்குள்ளேயே சுருங்கியிருக்கின்றன. நோட்டாவுக்கு 929 பேர் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர். இது மற்ற சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் பெற்ற வாக்குகளை விட அதிகம் ஆகும்.
-
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications