ஆளுநரை மாற்றாதீங்க! ஆர்என் ரவியே இருக்கட்டும்! ட்விஸ்ட் வைத்த ஸ்டாலின்! திருச்சியில் பரபர பேச்சு
திருச்சி: தமிழக ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. ஆர்என் ரவியை மாற்ற வேண்டும் என திமுக ஜனாதிபதியிடம் புகார் அளித்தது. இந்நிலையில் தான் தமிழக ஆளுநரை மாற்றம் செய்ய வேண்டாம் என திடீரென முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சியில் பரபரப்பாக பேசியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் திமுக தேர்தல் பணியை தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தான் இன்று திருச்சியில் 15 மாவட்டங்களை சேர்ந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நமக்கு எதிராக அவதூறு மற்றும் பொய் செய்திகளை பரப்பிட ஒரு கூட்டம் சுற்றி கொண்டு இருக்கிறது. பொய்களுக்கு ஆயுள் மிகக்குறைவு. அவர்கள் பொய்களை மட்டுமே சொல்லி கொண்டிருக்கட்டும். நாம் திரும்ப திரும்ப அரசின் திட்டங்களை பற்றி பேசி கொண்டிருக்கலாம். நம்முடைய அரசின் நலத்திட்டங்கள் பற்றி வாக்காளர்களிடம் எடுத்து கூறுங்கள். இதன்மூலம் எதிரிகள் பரப்பும் அவதூறு எல்லாம் சுக்கு நூறாக நொறுங்கிப்போகும்.
இன்றைய சமூக ஊடகங்கள் தான் சிறப்பான பரப்புரை களமாக மாறியுள்ளது. வீட்டில் பக்கத்து அறையில் இருந்தே வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்து வருகின்றனர். நாம் அனுப்பும் ஒரு செய்தி ஒரே நிமிடத்தில் உலகத்துக்கே பரவும் வசதி உள்ளது. இதனால் அனைவரும் சமூக வலைதளங்களில் கணக்குகளை தொடங்க வேண்டும். அந்த கணக்குகளில் இருந்து அவதூறுகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
தேவையில்லாத வம்பு, வாக்குவாதங்கள் எதுவும் செய்யாதீர்கள். ஏனென்றால் அதனை திசை திருப்பி விடுவார்கள். தெரிந்தோ, தெரியாமலோ ஆளுநர் நமக்கு பிரசாரம் செய்து வருகிறார். அவரை மாற்ற வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அவரே இருக்கட்டும். ஏனென்றால் தேர்தலில் நமக்கு வாக்கு அதிகரிக்கும். அதேபோல் தேவையற்ற பிரச்சனைகளை கிளப்பி யாரும் கெட்டப்பெயரை வாங்கி கொடுக்க கூடாது'' என தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications