"நெளிகிறது" திமுக.. தர்மசங்கடமா போச்சே.. கூட்டணிக்குள் ஒரே உஷ்ணம்.. அதிமுக பழனிசாமிக்கு குஷி போல..!!
திருச்சி: திமுக கூட்டணியில் விசிக இடம்பெற போகிறதா? இல்லையா? அப்படியானால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க போகிறதா? என்றெல்லாம் யூகங்கள் இணையத்தில் வலம்வந்தபடியே உள்ளன.. இதற்கு காரணம், திருமாவளவன் தந்த பேட்டிதான்..!!
பெரம்பலூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமானம் மூலம் திருச்சி வந்திருந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "பாராளுமன்ற இரு அவைகளுக்கும் குடியரசு தலைவர் தான் தலைவராக இருக்கிறார். அரசியலமைப்பு சட்டமே அதை தான் உறுதிப்படுத்துகிறது.

புதிய கட்டிடம்: புதிதாக பாராளுமன்ற கட்டிடம் கட்டியுள்ள நிலையில் அதன் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. திட்டமிட்டே உள்நோக்கத்தோடு குடியரசு தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதனை விசிக கண்டிக்கிறது. ஜனநாயக மரபை சிதைக்கும் வகையில் மோடி அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.
விசிக கண்டனம்: புதிய பாராளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவின்போது, அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. இப்போதைய குடியரசு தலைவரும் அழைக்கப்படவில்லை. இது திட்டமிட்டு செய்த நடவடிக்கை தான். அதுமட்டுமில்லாமல் மே 28-ந்தேதி என்பது சாவர்க்கரின் பிறந்த நாளாக உள்ளது. சனாதான தர்மத்தை நிலைநாட்ட பெரிதும் பாடுபட்டவர் சாவர்க்கர். அவர் பிறந்த நாளில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 2 காரணங்களுக்காக நாங்கள் பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளோம். இந்த விழாவிற்கு குடியரசு தலைவரும் அழைக்கப்பட வேண்டும், திறப்பு விழா தேதியும் மாற்றப்பட வேண்டும்.
முஸ்லீம்கள்: கர்நாடக தேர்தல் முடிவுகள் அகில இந்திய அளவில் பிரதிபலிக்கும். மோடி அரசுக்கு கர்நாடக மக்கள் அளித்த தீர்ப்பு அவர்களின் வெறுப்பு அரசியலுக்கு எதிரான தீர்ப்பு. கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சினை, முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு ரத்து போன்றவற்றை செய்து மக்களை பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். அதன் காரணமாக இந்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு அளித்து இந்துக்கள் தான் பாஜகவை தோல்வி அடைய செய்தார்கள்.
2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இது பிரதிபலிக்கும். கர்நாடக அமைச்சரவை பொறுப்பேற்பு விழாவில் எங்களுக்கு அவமரியாதை நடக்கவில்லை. முறைப்படிதான் எங்களுக்கு நாற்காலிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
மனிதாபிமானம்: கள்ளச்சாராய மரணம் மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். முழு மதுவிலக்கை வலியுறுத்தி மக்கள் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம். கள்ளச்சாரயத்தால் மரணம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்திருப்பது முதல்வர் ஸ்டாலின் அதை மனிதாபிமான அடிப்படையில் அணுகி இருக்கிறார் என்பதை தான் காட்டுகிறது. கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கிறது என விமர்சிக்கக் கூடாது.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவர்களோடு நான் கைக்கோர்ப்பேன். பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமையக்கூடாது, அது நாட்டுக்கு நல்லதல்ல, அது அமைந்தால் சனாதன வாதிகளுக்கு தான் வலு சேர்க்கும். ஜாதி பெயரில் பட்டங்கள் வழங்குவது விளம்பரத்திற்காக செய்யும் வேலை, தேவையில்லாத வேலை" என்று தெரிவித்துள்ளார் திருமாவளவன்.

திருமாவளவன்: விசிக தலைவர் திருமாவை பொறுத்தவரை, பாஜகவை தொடர்ந்து சாடி வருபவர்.. பாஜகவின் அபாயம் குறித்து எடுத்துகூறி, அதிமுகவை எப்போதுமே அலர்ட் செய்தபடியே வருபவர்.. இதைவைத்து, ஒருவேளை திருமாவளவன் அதிமுகவுடன் கூட்டணி வைக்க போகிறாரோ என்று யூகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டே வருகின்றன.. எனினும் திமுகவுடனான கூட்டணியை திருமாவளவன் உறுதிப்படுத்தி கொண்டே வந்தாலும், அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் இணையத்தில் கசிந்தபடியே உள்ளன..
கடந்தவாரம், மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம் தலைதூக்கியபோதுகூட, அதிமுகவின் மதுவிலக்கு போராட்டத்துக்கு ஆதரவும் தெரிவித்திருந்தார் திருமாவளவன்.. இதனால் மறுபடியும், அதிமுகவுடன் விசிக கூட்டணியா? என்றும் சிலர் கேள்விகளை கிளப்பி விட்டனர்.. இப்போது, மீண்டும் அதிமுக போராட்டத்துக்கு ஆதரவு தந்துள்ள நிலையில், மறுபடியும் "கூட்டணி யூகங்கள்" றெக்கை கட்டி பறக்கின்றன.
வேங்கைவயல்: விசிகவை பொறுத்தவரை, திமுக அரசை எந்த அளவுக்கு ஆதரிக்கிறதோ, அதே அளவுக்கு எதிர்க்கவும் செய்கிறது.. இன்னும் சொல்லப்போனால், திமுக அரசை கண்டித்து அதிக அளவு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது விசிகதான் என்பதை மறுப்பதற்கில்லை.. அப்படியானால், வேங்கைவயல் விவகாரத்தில், திமுக அரசை பெரிதாக கேள்வி கேட்கவில்லையே, எதிர்ப்புகளை பதிவு செய்யவில்லையே என்றும் சிலர் கேள்விகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்..
மறுபுறம் கூட்டணியில் இருந்துகொண்டே, திமுக அரசுக்கு நெருடலை தந்து வருகிறதே விசிக என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.. என்னதான் நடக்க போகிறது? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications