வீரமணி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் செருப்பு வீச்சு! தி.க.வினர் 2 பேரின் மண்டை உடைப்பு
திருச்சி: காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தி.க.தலைவர் வீரமணி பேச வந்த பிரச்சாரக் கூட்ட மேடையில் இந்து முன்னணியினர் செருப்புகளை வீசியதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி மக்களவை தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து இன்று திருச்சியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கற்க இன்று வந்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பிரச்சார மேடையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்து இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திடீரென மேடையை நோக்கி செருப்புகளை வீசியுள்ளனர்.
அப்போது நடந்த வன்முறையில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் இரண்டு பேர் தாக்கப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் மண்டை உடைந்தது. மேலும் காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டதுக்கு கட்டப்பட்டிருந்த மின்விளக்குகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதனால் காங்கிரஸ் பிரச்சாரக்கூட்டம் நடைபெறும் இடம் அருகே பதற்றமான சூழல் காணப்படுகிறது. இதனால் அசம்பாவிதத்தை தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications