மேட்டருக்கு வந்த துரை வைகோ.. "காரல் மார்க்ஸ் பத்தியெல்லாம் பேசுறாரே.. ஆளுநர் கடமை என்ன.. நறுக் கேள்வி

துரை வைகோ திருச்சியில் தந்த பேட்டியில் ஆளுநர் ரவி மற்றும் பாஜகவை சரமாரியாக விமர்சித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: எங்களுக்கு சுடத்தெரியும், குண்டு வைக்கத் தெரியும் என்று பகிரங்கமாக சொல்லி, வன்முறையை தூண்டும் வகையில் பேசிய முன்னாள் ராணுவ வீரர் மீது கண்டிப்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மதிமுகவின் துரை வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

2 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி விவாகரம் தலைதூக்கியிருந்த நிலையில், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஆளுநர் ரவிக்கு எதிரான கருத்துக்களையும், பேட்டிகளையும் தந்து வந்தனர்.

அந்தவகையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது 'சாபக்கேடு' என்று மதிமுக தலைமை செயலாளர் துரை வைகோவும் குற்றம்சாட்டியிருந்தார்.

 சாபக்கேடு

சாபக்கேடு

அப்போது செய்தியாளர்களிடம் துரைவைகோ பேசும்போது, "ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு 17 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 30ஐ கடந்திருக்கிறது. சட்டப் பேரவையில் இந்த சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட பிறகும், ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அவரின் சந்தேகங்களுக்கு சட்டத்துறை அமைச்சர் பதில் அளித்திருக்கிறார். இருந்தபோதிலும் இப்போது வரை அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது ஒரு பெரிய 'சாபக்கேடு'. ஆளுநர் மக்களுக்காக செயல்பட வேண்டும். 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் தற்போது நிலுவையில் இருக்கின்றன.

 வையாபுரி வைகோ

வையாபுரி வைகோ

அதனால், ஆளுநர் தனது கடமையை முதலில் செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு, தனிப்பட்ட ஒரு இயக்கத்தின் சார்பாகவும், ஒரு சித்தாந்தத்தின் சார்பாகவும் தொடர்ந்து குரல் கொடுத்து பணி செய்வது என்பது ஆரோக்கியமானது அல்ல. ஜனநாயக நாட்டில் இப்படி செயல்படுவது ஜனநாயக கேடு. இந்த கால தாமதத்திற்கு காரணம் சொல்லும் அண்ணாமலை, தமிழ்நாடு அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். நியாயமான குற்றச்சாட்டுகளை சொல்வதில் தவறு கிடையாது. ஆனால் அவர் சொல்வது விமர்சனம் அல்ல. அது அவதூறு. அண்ணாமலை நன்கு படித்தவர். அதனால் பொறுப்புள்ள அரசியல் கட்சித் தலைவராக செயல்பட வேண்டும்" என்றும் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்திருந்தார் துரைவைகோ.

 துரை வைகோ

துரை வைகோ

இந்நிலையில், மீண்டும் இதே விவகாரம் குறித்து, செய்தியாளர்களிடம் பேட்டி தந்துள்ளார் துரை வைகோ.. திருச்சியில் மதிமுக நிர்வாகி பணி ஓய்வு விழாவில் கலந்து கொள்வதற்காக, திருச்சி வந்திருந்தார் துரை வைகோ.. அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழக ஆளுநர் ரவி, திராவிட சித்தாந்தங்கள் பற்றி பலவாறான கருத்துக்களை சொல்லி வருகிறார்... ஆளுநராக இருப்பவர் அரசியலை கடந்த, மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்... டார்வின், காரல்மார்க்ஸ் பற்றியெல்லாம் கருத்து சொல்லி வருகிறார்.. ஆனால், ஒரு ஆளுநரின் கடமை என்ன? சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட சட்டங்களை நிறைவேற்றவே இன்னும் அனுமதிக்கவில்லை.

 ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டத்தால், பணத்தை இழந்தவர்களில், 40க்கும் மேற்பட்டோர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்... தமிழக அரசு, அதற்கான சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், ஒரு ஆளுநருக்கான அடிப்படை கடமைகள் கூட தெரியாமல், இவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.. தேவையில்லாமல் அரசியல் பற்றிய கருத்துக்களையும், திராவிட சித்தாந்தங்கள் பற்றிய கருத்துக்களையும் பேசி, ஆர்எஸ்எஸ்சின் அறிவிக்கப்படாத பிரசார பீரங்கியாகவும் செயல்படுகிறார்.

 ஜனநாயகம்

ஜனநாயகம்

ஜனநாயக முறைப்படி, ஒரு தேர்தல் நடந்தால், அங்கே பணம் என்பது கொடுக்கக் கூடாது.. இதில் என்பது எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.. அது ஜனநாயகத்துக்கு எதிரான செயலும்கூட.. ஆனால், மக்களை பொறுத்தவரை, யார் பணம் கொடுத்தாலும், ஒரு முடிவு எடுத்து விட்டால், அந்த முடிவில் உறுதியாக இருப்பார்கள். அதை மாற்றும் சக்தி எந்த அரசியல் கட்சிக்கும் கிடையாது.. அதை யாராலும் மாற்ற முடியாது. கடந்த காலங்களை எடுத்து கொண்டால், எத்தனையோ பேர் தேர்தல்களில் பணமாகவும், நகையாகவும் தந்திருக்கிறார்கள்.. ஆனால், அப்படி தந்தும்கூட அவர்கள் தோற்றிருக்கிறார்கள்.

 சுடத்தெரியும்

சுடத்தெரியும்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல் ஆணையம் தான், ஈரோடு இடைத்தேர்தலில், எழுந்துள்ள புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, யாராக இருந்தாலும் சரி, எந்த இயக்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும்சரி, எங்களுக்கு துப்பாக்கியால் சுட தெரியும், குண்டு வைக்க தெரியும், நாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஊடகங்கள் முன்னிலையே முன்பே பகிரங்கமாக சவால் விடுக்கும்போது அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 கண்ட்ரோல்

கண்ட்ரோல்

அதுவும் ஒரு ராணுவ வீரராக இருப்பவர், கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டியவர். அவர்கள் இந்நாள் அல்லது முன்னாள் வீரராகவும் இருக்கலாம்.. அவர்களுக்கு ராணுவத்தில் முதலில் சொல்லி தருவதே கட்டுப்பாடுதான். அப்படியிருக்கும்போது, இந்த நபர் இந்திய ராணுவத்தில் இருந்தாரா என்பதே கேள்வியாக உள்ளது.. எங்களுக்கு சுடத்தெரியும், குண்டு வைக்கத் தெரியும் என்று பகிரங்கமாக சொல்லி, வன்முறையை தூண்டும் வகையில் பேசிய முன்னாள் ராணுவ வீரர் மீது கண்டிப்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் துரைவைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+