திருச்சி லோக்சபா மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு இத்தனை கோடியில் சொத்தா?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் துரை வைகோவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிடும் துரை வைகோ, தனது வேட்புமனுவை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் தாக்கல் செய்தார். அவருடன், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், திமுக மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மதிவாணன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் உடன் சென்றனர். உறுதிமொழி வாசித்த போது 'ஆண்டவன் மீது ஆணையாக' என்று துரை வைகோ உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

Durai Vaiko has Rs 35 crore asset worth nomination filed lok sabah election 2024

பின்னர் திருச்சி பாராளுமன்ற மதிமுக வேட்பாளர் துரை வைகோ செய்தியாளரிடம் கூறியதாவது: ;திருச்சியில் நேற்று வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் போது நடைபெற்ற கசப்பான சம்பவங்களை நான் மறந்து விட்டேன். எனக்கு தற்போது இருக்கும் எண்ணமெல்லாம் வெற்றி வெற்றி வெற்றி என்ற ஒரே இலக்கு மட்டும் தான்.

அதை நோக்கி தான் நாங்கள் அனைவரும் பயணிக்கிறோம். எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை. அமைச்சர் நேரு, அவரது மகன் அருண் நேருவை போலவே என்னையும் ஒரு மகனாக நினைக்கிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் வரை வந்து என்னை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

நேற்று நடந்த சம்பவம் குறித்து வைகோவிடம் எதுவும் நான் பேசவில்லை. திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு சின்னங்கள் ஒதுக்கவில்லை. இதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். விரைவில் உரிய முடிவு காணப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அமலாக்கத்துறை, சிபிஐ போன்றே தேர்தல் ஆணையமும் ஜனநாயக படுகொலை நடத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் தனக்கு ரூ. 35.90 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளாா். அவா் திங்கள்கிழமை தாக்கல் செய்த தனது வேட்பு மனுவில் இணைத்துள்ள சொத்து மதிப்பு பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்திருப்பது: மதிமுக வேட்பாளா் துரை வைகோவிடம் கையிருப்பாக ரூ.2 லட்சத்து 5 ஆயிரம், அவரது மனைவி கீதாவிடம் ரூ.5 லட்சத்து 2 ஆயிரம், மகன் வருணிடம் ரூ.2 ஆயிரத்து 500, மகள் வானதி ரேணுவிடம் ரூ.2 ஆயிரம் உள்ளது.

அவரது குடும்பத்தினா் பெயா்களில் ரூ.2 கோடியே 18 லட்சத்து 94 ஆயிரத்து 789 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.33 கோடியே 71லட்சத்து 89 ஆயிரத்து 498 மதிப்பிலான அசையா சொத்துக்கள் என மொத்தம் ரூ.35 கோடியே 90 லட்சத்து 84ஆயிரத்து 287 உள்ளதாகவும், ஒரு காா் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா். அவருக்கு ரூ.1 கோடியே 35 லட்சத்து 65 ஆயிரம் கடன் (2.07 கிலோ தங்க நகைகள், 6.38 கிலோ வெள்ளி, ரூ.19 லட்சம் மதிப்பிலான வைர நகைகள்) உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா். தனது மீது எந்த வழக்கும் இல்லை என தெரிவித்துள்ளாா்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+