சிஎம் 10 மணிக்கு வர்றாரு.. 5 மணிக்கு போறாரு! ரீல்ஸை வைத்து வண்டியை ஓட்டும் விஜய்! எடப்பாடி அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: அரசு அலுவலகத்திற்கு அலுவலர்கள் செல்வது போன்று தலைமைச் செயலத்திற்கு 10 மணிக்கு முதலமைச்சர் வருகிறார். ஐந்து மணிக்கு வீட்டுக்கு செல்கிறார். இதைத் தவிர வேறு என்ன சாதித்தார். ரீல்ஸ் இந்த ஆட்சியினுடைய அஸ்திவாரம் என கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மேலும், 6 மாதத்தில் 40 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளார்கள்.. அதுதான் சாதனை என்றார்.

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," தவெக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. இந்த ஆட்சி விழி பிதுங்கி உள்ளது. சரியான முறையில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இந்த ஆட்சியில் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்து உள்ளது. 6 மாதத்தில் 40 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளார்கள். அதுதான் சாதனை.

Edappadi Palaniswami TVK Vijay

விலைவாசி உயர்வு சாதனை சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பயமாக உள்ளது. அடிக்கடி குழந்தைகள் மாயமாகி வருகிறது. சிறைச்சாலையில் இருந்து குற்றவாளிகள் எளிதாக தப்பி ஓடிவிடுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முடியவில்லை. கையாலாகாத அரசாங்கமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை திருட்டு நடந்து கொண்டுதான் வருகிறது. இதை அவர்கள் பேசுவதற்கு தகுதியில்லை அருகதையும் இல்லை நாங்கள் உழைத்து வந்தவர்கள். மக்களுக்கு உழைத்து வரவேண்டும். ரீல்சில் வந்தவர்கள். அதிர்ஷ்டவசத்தில் ஜாக்பாட்டில் வந்தவர்கள் தமிழக வெற்றி கழகம். அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றி உள்ளோம்.

அதிமுக ஆட்சி

விமான நிலையத்திற்கு அதிமுக ஆட்சியில் தான் இடம் கொடுத்து உள்ளோம். முக்கொம்பில் அணை கட்டியது அதிமுக ஆட்சியில், ஒரு மிகப்பெரிய திட்டமாக இந்த ஆட்சியில் செய்தார்களாம். ஆறு மாவட்டத்தை பிரித்துக் கொடுத்துள்ளோம். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்து சாதனை படைத்துள்ளோம். ஆறு சட்டக் கல்லூரி கொண்டு வந்துள்ளோம். 68 கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வந்துள்ளோம். 21 பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வந்துள்ளோம்.

காவிரி குண்டாரு திட்டம்

ஐந்து கால்நடை மருத்துவக் கல்லூரி கால்நடை மருத்துவப் பூங்கா இதெல்லாம் அதிமுக ஆட்சியின் சாதனைகள். இவர்கள் ஒரு சாதனை கூட செய்யவில்லை. காவிரி குண்டாரு திட்டம் மிகப்பெரிய திட்டம். 14,000 கோடி மாநில அரசால் ஒதுக்கப்பட்ட திட்டம். 150 கோடிக்கு ஒதுக்கினார்கள். விரிவான திட்டம் என்கிறார்கள் அந்தத் திட்டம் ஏற்கனவே நடந்து கொண்டு இருக்கிறது. என்னானே தெரியாத ஆட்சி டிவிகே ஆட்சி. ஐந்து மாத கால தமிழக வெற்றிக்கழக ஆட்சி மைனஸ் பூஜ்ஜியம் ஆட்சி.

சட்டம் ஒழுங்கு

திமுகவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவது எங்களுக்கு அதைப் பற்றி முழுமையான காரணம் தெரியாததால் அது பற்றி கூற முடியாது. வழக்கு போட்டவர்களுக்கும் வழக்கு வாங்கியவர்களுக்கும் தான் இது குறித்து தெரியும். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இன்றைக்கு கசாப் கடையில் வெட்டுகிற மாதிரி ரோட்டில் போறவர்களை வெட்டுகிறார்கள். இந்த காட்சி இந்த ஆட்சி தான் நடக்கிறது. சட்டம் ஒழுங்கு கிடையாது முதலமைச்சர் அக்கறை காட்டுவதில்லை.

ரீல்ஸ் ஆட்சி

அரசு அலுவலகத்திற்கு அலுவலர்கள் செல்வது போன்று தலைமைச் செயலத்திற்கு 10 மணிக்கு முதலமைச்சர் வருகிறார். ஐந்து மணிக்கு வீட்டுக்கு செல்கிறார். இதைத் தவிர வேறு என்ன சாதித்தார். ரீல்ஸ் இந்த ஆட்சியினுடைய அஸ்திவாரம். இதை இரண்டை வைத்துக்கொண்டு தான் வண்டி ஓட்டுகிறார்கள் எத்தனை நாளைக்கு ஓட்ட முடியும். அதிமுகவில் இருந்து நீக்கினால் நீக்கியது தான் புரிந்து கொள்ள வேண்டும்.

மின்வெட்டு

ஒரு கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துவிட்டால் அதோடு முடிந்து விட்டது. உங்களுக்கு விறுவிறுப்பான செய்தி வேண்டும் அதற்கு நாங்கள் தான் கிடைத்தோம். மின்வெட்டு எந்த நிலையில் இருக்கிறது என தெரியவில்லை. மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்த போது மின்வெட்டு ஏற்பட்டது மீனாட்சி அம்மனை பார்த்துக் கொள்வார். மின்வெட்டிற்கு தீர்வு காண வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+