Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்ளே பூட்டப்பட்ட கதவு.. திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் மர்ம சாவு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பணிபுரியும் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிரார்கள்.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு பகுதியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் கேரளாவைச் சேர்ந்த முரளிதரன் (56) மெஷினிஸ்ட் ஆக பணிபுரிந்து வந்தவர்.

Employee of a Trichy ordnance factory mysteriously died

உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு ரேகா என்ற மனைவியும், ராகுல் என்ற மகனும், ஸ்ரீலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

இவர்கள் கேரளா மாநிலம், ஒட்டப்பாலம் பகுதியில் வசித்து வருகின்றனர். முரளிதரன் கடந்த 1ஆம் தேதி இரவு பணிக்கு வந்து சென்றவர். கடந்த இரண்டு நாட்களாக பணிக்கு வரவில்லை. இவரது நண்பர் விஜயகுமார் கடந்த இரண்டு நாட்களாக செல்போனில் தொடர்பு கொண்டும் முரளிதரன் தொடர்பும் கிடைக்கவில்லை.

Employee of a Trichy ordnance factory mysteriously died

எனவே நேரில் சந்திக்க வேண்டும் என இன்று வீட்டுக்கு விஜயகுமார் சென்று பார்த்தார். வீட்டின் உள் தாழ்ப்பாள் போட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கததால், இது குறித்து நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் முரளிதரன் மயங்கிய நிலையில் வீட்டின் உள்ளே கிடந்துள்ளார்.

Employee of a Trichy ordnance factory mysteriously died

உடனடியாக திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இது குறித்து கேரளாவில் உள்ள இவரது மனைவி ரேகாவிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை முடிந்தவுடன் அவரது உடலை கேரளாவிற்கு அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளை திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பிஎம்எஸ் தொழிற்சங்கத்தினர் செய்து வருகின்றனர். இவரது மர்ம மரணம் குறித்து நவல்பட்டு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+