எம்ஜிஆர் மறைந்த நாளில் திருநாவுக்கரசர் செய்ததை சொல்லட்டுமா.. எச்சரிக்கும் ஈவிகேஎஸ் ஆதரவாளர்கள்!
திருச்சி: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இடையிலான மோதல் நாற ஆரம்பித்து விட்டது. இருவரும் தரை லோக்கலுக்கு இறங்க ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்கள் ஒரு எச்சரிக்கையை விடுத்து அறிக்கை விடுத்துள்ளனர்.
ஈவிகேஎஸ் இங்கோவன் ஆதரவாளர்களான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஏ.பி.சி.வி. சண்முகம், ரங்கபாஷ்யம், வி.ஆர். சிவராமன், ஜெரோம் ஆரோக்கியராஜ், குலாம் மொகைதீன், வசந்தராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் திருநாவுக்கரசர் குறித்த ரகசியங்களை வெளியிடுவோம் என எச்சரித்துள்ளனர்.
இதுதொடர்பாக இவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது:

மிகுந்த வேதனை
ராகுல் காந்தியின் ஆணையின்படி மோடி அரசின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை நினைவூட்டி கருப்பு தினமாக அறிவித்து காங்கிரஸ் சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இளங்கோவனின் அரசியல் பாரம்பரியம் பற்றி விமர்சனம் செய்தது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனையும் மிகுந்த மனவேதனை அடையச் செய்துள்ளது.

காமராஜர்
சமூக நீதிக்காக புரட்சி செய்த தந்தை பெரியாரையும், சொல்லின் செல்வர் ஈ.வே.கி. சம்பத் குறித்தும் பேசுவதற்கு திருநாவுக்கரசருக்கு தகுதி இல்லை. பச்சைத் தமிழர் காமராஜரை இன்னும் 10 ஆண்டுகளுக்கு விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னவர் தந்தை பெரியார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து காங்கிரஸ் பேரியக்கத்தை ஓங்கி நிற்கச் செய்தவர் தந்தை பெரியார்.

சிவாஜியை அவமதிப்பதா
தனது கவுரவம் பாதிக்கப்பட்ட போது, தன்மானம்தான் பெரிது என எண்ணி திராவிட கொள்கைகளை துறந்து தேசிய நீரோட்டத்தில் இணைந்த சம்பத் தமிழக காங்கிரஸ் துணைத் தலைவராக - பொதுச் செயலாளராக பணியாற்றி பட்டித் தொட்டியெங்கும் தனது சொல்லாற்றலால் காங்கிரஸ் கொள்கைகளை முழங்கியவர்.
சுதந்திர போராட்ட தியாகியின் குடும்பத்தில் பிறந்து மறைந்த பல தியாகிகளை உலகம் உள்ளவரை அனைவரும் போற்றும் வண்ணம் தனது நடிப்பால் உயிரோட்டம் கொள்ளச் செய்தவர் சிவாஜிகணேசன், காங்கிரஸ் பேரியக்கமே தனது உயிர் மூச்சு என வாழ்ந்தவர். அவரைக் கொச்சைப்படுத்தி பேசுவதை உண்மையான எந்த காங்கிரஸ் தொண்டனும் ஏற்கமாட்டான்.

பொம்மை தலைவர்
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் கொள்கை பிடிப்போடு வெவ்வேறு கட்சிகளில் இருப்பது தவறில்லை. ஒரே நபர் பதவி சுகத்துக்காக, விசுவாசமும், நன்றியும் இல்லாமல் பல கட்சிகளுக்கு போவதுதான் கேவலமான செயல். பதவிக்காக தன்மானத்தையும், மரியாதையையும் இழந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் பொம்மை தலைவராக வலம் வரும் திருநாவுக்கரசருக்கு அவர்களது வரலாறு தெரிய வாய்ப்பில்லை.

ரகசியத்தை வெளியிடவா
பதவி சுகத்திற்காக பல கட்சிகளுக்கு இடம் பெயர்ந்து, இருந்த இடத்திற்கு விசுவாசமும், நன்றியும் இல்லாதவர் திருநாவுக்கரசர். இளங்கோவன் மீது இனி மேலும் இது போன்ற தரமற்ற விமர்சனங்களை செய்தால் இவர் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த போது மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மறைந்த இரவில் என்னென்ன காரியங்கள் செய்தார் என்ற விபரங்களை எல்லாம் வெளியிட நேரிடும் என்று கூறியுள்ளனர்.
-
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications