"வசியம்".. உடும்பை கொன்று.. சொந்த செலவில் "வசியம்" வைத்து கொண்ட ஜோசியக்காரர்.. அதிரடி கைது
உடும்பு வசிய மை தயாரிப்பு குறித்து யூடியூப்பில் வீடியோ வெளியிட்டவர் கைதானார்
திருச்சி: உடும்பை கொன்று வசிய மை தயாரித்து, யூ- டியூபில் வீடியோ பதிவிட்ட ஜோசியக்காரரை மணப்பாறை போலீசார் கைது செய்துள்ளளனர்.
Recommended Video
திருச்சி மாவட்டம், மணப்பாறை மணியன்குறிச்சியைச் சேர்ந்தவர் பெரியசாமி.. இவர் ஒரு ஜோதிடர்.. 42 வயதாகிறது. வசியம் செய்வதாகவும் கூறி வந்தார்.. இதனால் இவரை தேடி மக்கள் கூட்டம் கூட ஆரம்பித்தது.. அப்போதுதான் பிசினஸை பெருக்க ஒரு வீடியோ வெளியிட்டார்.

யார் யாரை எப்படியெல்லாம் வசியம் செய்யலாம், அதற்கான வசிய மை எப்படி தயாரிப்பது என்பது குறித்த அந்த வீடியோவை 9 மாதங்களுக்கு முன்பு யூ -டியூபிலும் வெளியிட்டார். உடும்பை கொன்று வசிய மை தயாரித்ததாக பகிரங்கமாகவே கூறியிருந்தார்.
"எதிரிகளை ஸ்தம்பிக்க வைக்கும் உடும்பு வசிய மை" என்றே அந்த வீடியோவில் பெயரிட்டிருந்தார்.. தொழிலில் வெற்றி பெறுவது, பணம் சம்பாதிப்பது, எதிரிகளை வெல்வது போன்றவற்றிற்கும் அந்த வசிய மை உபயோகப்படும் என்றும் சொல்லவும், இந்த வீடியோ பெரும் பரபரப்பாக மக்களிடையே பேசப்பட்டது.
இறுதியில் இந்த வீடியோ வனத்துறையினரின் பார்வைக்குச் சென்றதை அடுத்து பெரியசாமி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மணப்பாறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர், 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வசிய மை தயாரிப்பது எப்படி என்று போலியாக பப்ளிசிட்டி தேட முயன்ற ஜோசியர் தனக்கு தானே சூனியம் வைத்து கொண்டு தற்போது ஜெயிலில் உள்ளார்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications