திருச்சி தினத்தந்தி பிரிண்டிங் ஆபீசில் பயங்கர தீ விபத்து
திருச்சி: திருச்சி-தஞ்சை மெயின்ரோட்டில் துவாக்குடி சிப்காட் பகுதியில் உள்ள தினத்தந்தி பிரிண்டிங் வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பேப்பர் பண்டல்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
திருச்சி தினத்தந்தி நாளிதழுக்கு திருச்சி- தஞ்சை சாலையில் துவாக்குடி சிப்காட் பகுதியில் புதிய அச்சகம் திறக்கப்பட்டது.

இங்கு திருச்சி, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்கான தினந்தந்தி நாளிதழ் அச்சிடப்பட்டு வந்தது. நவீன இயந்திரங்களை கொண்டு அமைக்கப்பட்ட இந்த அச்சகம் கடந்த 2 மாதத்திற்கு முன்தான் பயன்பாட்டிற்கு வந்தது.
இந்நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் அதில் திடீர் என்று தீவிபத்து ஏற்பட்டது. இதில் கோடிக்கணக்கான மதிப்பிலான இயந்திரங்கள், பேப்பர் பண்டல்கள் நாசமானதாக கூறப்படுகிறது.
துவாக்குடி, நவல்பட்டு, திருவெறும்பூர், உள்ளிட்ட இடங்களிலிருந்து சென்ற தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, திருச்சி, தஞ்சை பதிப்புக்கு உட்பட்ட வாசகர்களுக்கு வேறு பிராஞ்ச்சிலிருந்து நாளை காலை செய்தித்தாள் வினியோகிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications