ஆமாங்க.. கிழிச்ச ஷு போட்டுத்தான் ஓடினேன்.. சென்டிமெண்ட்டை டச் பண்ணிய தங்கம் வென்ற கோமதி
திருச்சி: ஆசிய போட்டியில், தான் ஓடும்போது தன்னுடைய காலணி கிழிந்து இருந்தது உண்மை தான் என்றும் ஆனால் அது ராசியான காலணி என்றும் தங்கம் வென்ற கோமதி விளக்கம் அளித்துள்ளார்.
ஆசிய தடகளப்போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பில் கோமதி மாரிமுத்து முதலிடம் பிடித்து தங்கம் வென்று சாதனை படைத்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் ஆசிய தடகளத்தில் கோமதி கிழிந்து போன காலணி அணிந்து ஓடி வெற்ற பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவத் தொடங்கின. மேலும் அவர் அணிந்திருந்த காலணி வேறு வேறு மாடலில் இருந்ததாகவும் தகவல்கள் பரவின.
இந்நிலையில் சொந்த மாவட்டமான திருச்சிக்கு வந்த அவருக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து ஆனந்த கண்ணீரில் திணறடித்தனர். அப்போது உற்சாகத்தில் இருந்த அவரிடம் செய்தியாளர்கள் காலணி குறித்து கேள்வி எழுப்பினர்,
அதற்கு பதில் அளித்த கோமதி, ஆசிய போட்டியில், தான் ஓடும்போது தன்னுடைய காலணி கிழிந்து இருந்தது உண்மை தான் என்றும் ஆனால் அது ராசியான காலணி என்பதால் அணிந்து இருந்ததாகவும் விளக்கம் அளித்தார். மேலும் காலணியின் ஜோடி மாறியிருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு அது டிசைன் தான் என்றும் மற்றபடி ஒரே காலணி தான் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications
