மணப்பாறையில் குவியல் குவியலாக குப்பையில் கிடந்த பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய தபால்கள்!
திருச்சி: மணப்பாறையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படாத தபால்கள் குவியல் குவியலாக குப்பையில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள தனியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குப்பையோடு குப்பையாக தபால்கள் குவியல் குவியலாக கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தபால் அனைத்தும் கல்வி நிலையங்கள், மாவட்ட ஆட்சியரகம் சார்ந்த தபால்களாகவே அங்க இருந்தன. அனைத்து தபால்களும் முத்திரைவில்லைகள் ஒட்டப்பட்டு, தபால் நிலைய நாட்குறிப்பு அச்சு பதிக்கப்பட்டும் இருந்து..
பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படாத அரசுப் பணி மற்றும் அனைத்து துறையைச் சேர்ந்த அவரச கால அரசு தபால்கள் உரியவர்களிடம் சென்றடையாமல் இவ்வாறு குப்பைகளில் வீசப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்ற மணப்பாறை போலீஸார் தபால்களை சேகரித்து அவை எங்கிருந்து வந்தது? யார் குப்பையில் போட்டது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications