ஆளைக் காணோம்.. திருநாவுக்கரசரை கண்டுபிடிச்சா பரிசு.. வெல்லமண்டி நடராஜன் கலகல.. காங். வெலவெல!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசை யாராவது பார்த்திருக்கிறீர்களா? கண்டுபிடித்து கொடுத்தால் நான் பரிசு தருகிறேன் என்று அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன் மக்களிடம் கேட்டார்.

தற்போது தி.மு.க. கூட்டணியில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளரும், வெளியூர் நபர்தான், எம்.பி.யை தேடுவது போல் அவரையும் தேட வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு வரும் என்றும் அமைச்சர் கூறினார்.

என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன் என்றும் வெல்லமண்டி என். நடராஜன் மக்களிடம் தெரிவித்தார்.

அனல் பறக்கும் பிரசாரம்

அனல் பறக்கும் பிரசாரம்

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக சார்பில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெல்லமண்டி என்.நடராஜன் வாக்கு வேட்டை

வெல்லமண்டி என்.நடராஜன் வாக்கு வேட்டை

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், மாநகர் மாவட்ட செயலாளரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் பெரியகடைவீதி, பைரவர் கோவில் அருகில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.16, 17 ஆகிய வார்டுகளில் உள்ள சவுராஷ்டிரா தெரு, ராணி தெரு, சின்ன சவுராஷ்டிரா தெரு, கள்ளத்தெரு, பெரியகடைவீதி, ஜாபர்ஷாதெரு, சமஸ்பிரான்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

திருநாவுக்கரசர் எம்.பி.யை பார்த்திருக்கிறீர்களா?

திருநாவுக்கரசர் எம்.பி.யை பார்த்திருக்கிறீர்களா?

அப்போது வெல்லமண்டி என்.நடராஜன், 'தி.மு.க. கூட்டணி சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி. திருநாவுக்கரசை, தேர்தலுக்கு பிறகு நீங்கள் யாராவது தொகுதியில் பார்த்திருக்கிறீர்களா? திருச்சி எம்.பி. திருநாவுக்கரசரை கண்டுபிடித்து கொடுத்தால் நான் உங்களுக்கு பரிசு தருகிறேன்' என்று மக்களிடம் கூறினார்.

உழைக்க காத்திருக்கிறேன்

உழைக்க காத்திருக்கிறேன்

இதேபோல் தற்போது தி.மு.க. கூட்டணியில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளரும், வெளியூர் நபர்தான், எம்.பி.யை தேடுவது போல் அவரையும் தேட வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு வரும். நான் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன். எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+