திருச்சி அருகே பயங்கரம்.. அதிகாலையில் லாரி மீது கார் மோதி கொடூர விபத்து! சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி
திருவாசியில் லாரி மீது ஆம்னி கார் மோதி கொடூர விபத்து ஏற்பட்டுள்ளது.
திருச்சி: திருச்சி அடுத்துள்ள திருவாசியில் லோடு லாரி மீது ஆம்னி கார் மோதியதில் கடுமையான விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிபாதமாபக உயிரிழந்தனர்.
பொதுவாக அதிகாலை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்துவார்கள். அதிகாலை நேரத்தில் வெளிச்சம் போதியளவில் இருக்காது என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இதன் காரணமாக அதிகாலை நேரத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அப்படித்தான் திருச்சி அடுத்துள்ள திருவாசி என்ற இடத்தில் லாரியும் ஆம்னி காரும் மோதிக் கொண்டதில் மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது.

திருச்சி விபத்து
திருச்சி அடுத்துள்ள திருவாசி அருகே அதிகாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. சேலம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது ஆம்னி கார் மோதி இன்று அதிகாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கும்பகோணம் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் சிலர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

எப்படி நடந்தது
சேலம் எடப்பாடி மாவட்டத்தில் இருந்து 9 பேர் ஆம்னி கார் மூலம் கும்பகோணத்தில் உள்ள கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். அதேபோல திருச்சியில் இருந்து வந்த லாரி கரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த ஆம்னி கார் திருவாசி என்ற இடத்திற்கு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக அது லாரி மீது மோதியதில் இந்த மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது.

6 பேர் பலி
அதிகாலை சுமார் 3.40 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. லாரியும் ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்த விபத்தில் ஒரு குழந்தை, ஒரு பெண் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தோரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்திற்கான காரணம் தெரியவில்லை.

போலீசார் விசாரணை
இந்த விபத்து காரணமாகத் திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் நெடுஞ்சாலையில் போக்குவரத்தைச் சீர் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தை திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார் நேரில் ஆய்வு செய்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications