Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

KN நேரு சாய்ஸ் எடுபடுமா..? யார் அந்த 5 பெண்கள்.. மேயர் பதவிக்கு முட்டி மோதும் முக்கிய தலைகள்

திருச்சியின் அடுத்த மேயர் யார் என்பதில் ரேஸ் நடந்து கொண்டிருக்கிறதாம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: அடுத்த திருச்சி மேயர் யார் என்பதில்தான் உச்சக்கட்ட பரபரப்பு மலைக்கோட்டையில் ஏற்பட்டுள்ளது..!

திருச்சி மாவட்ட திமுகவை பொறுத்தவரை, அமைச்சர்கள் கேஎன் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி என இருவரின் தலைமையில், இரு பிரிவாக செயல்பட்டு வருகிறது..

கடந்த 2 வருடங்களாகவே உட்கட்சி பூசல்களும் மறைமுகமாகவே திருச்சியில் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்று ஒரு தரப்பும், அப்படியெல்லாம் இல்லை, இருவருமே ஒருங்கிணைந்துதான் மாவட்ட வளர்ச்சிக்கான முன்னெடுப்பை எடுத்து வருகிறார்கள் என்று மற்றொரு தரப்பும் கூறி வருகிறது.

வியூகங்கள்

வியூகங்கள்

இந்நிலையில்தான், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், அமைச்சர்களுடன் நெருக்கமானவர்கள், வார்டில் செல்வாக்கு மிக்கவர்கள் கவுன்சிலர் சீட்டை கைப்பற்ற பல்வேறு வியூகங்களை கையில் எடுத்தனர்.. அதுமட்டுமல்ல, இரு அமைச்சர்களில் யாருடைய ஆதரவாளர் மேயர் வேட்பாளர் என்பதிலும் மிகப்பெரிய போட்டி நடந்ததாகவும் சொல்லப்பட்டது.

மேயர்

மேயர்

இப்போது தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில், திருச்சி மேயர் யார் என்பதில்தான் அடுத்த சிக்கல் கிளம்பி உள்ளது.. மேயர் பதவிக்கு, முன்னாள் துணை மேயர் அன்பழகனை நிறுத்த, அமைச்சர் நேரு தரப்பு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. ஆனால், மற்றொரு பக்கம் இந்த பதவியை பெற பெண்கள் தரப்பு முனைப்பு காட்டி வருகிறதாம்.. ஒன்றல்ல, ரெண்டல்ல, மொத்தம் 5 பெண்களாம். செல்வராணி, மதனா, விஜயா ஜெயராஜ், தமிழரசி, விஜயலட்சுமி ஆகியோர்தான் அந்த 5 பேர் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரபரக்கின்றன.

செல்வராணி

செல்வராணி

இதில் செல்வராணி என்பவர் யார் தெரியுமா? திருச்சி மாநகர போலீசில், ஏட்டாக வேலை பார்த்தவர்.. கவிசெல்வா என்ற பெயரில், செல்வராணி பல கவிதைகள் எழுதி வருபவர்.. கருணாநிதி இறந்தபோது, அவரை, "அப்பா" என்று அழைத்து இரங்கற்பா எழுதி, சோஷியல் மீடியாவில் வெளியிட்டவர்.. இது சர்ச்சையாகி, துறைரீதியான நடவடிக்கை செல்வராணி மீது எடுக்கப்பட்டு, அவரை நாகப்பட்டினத்துக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டு, அதனாலேயே தன் போலீஸ் வேலையை ராஜினாமா செய்தவர்தான் இந்த செல்வராணி.

 பள்ளி ஆசிரியை

பள்ளி ஆசிரியை

அடுத்து மதனா என்பவர், அரசு பள்ளி ஆசிரியராக வேலை பார்த்தவர்.. ஜாக்டோ ஜியோ அமைப்பின் மகளிர் அணி தலைவியும்கூட.. 31 வருட டீச்சர் வேலையில் இருந்தவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காகவே தன்னுடைய ஆசிரியை பணியை துறந்தவர்.. இவரும் மேயர் பதவிக்கு வாய்ப்பு கேட்டுள்ளார்... அடுத்ததாக விஜயா ஜெயராஜ் என்பவர் திமுகவின் மகளிர் அணி நிர்வாகி ஆவார்.. கருணாநிதி இருந்தபோது, கடந்த 2012-லும் திமுகவின் மேயர் வேட்பாளராக இவர்தான் நிறுத்தப்பட்டிருந்தார்.. இவரும் இப்போது பதவி கேட்டு வருகிறார்.

சுப்பையா

சுப்பையா

மற்றொரு நபர் தமிழரசி.. அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமாக இருந்தவர் டாக்டர். தமிழரசி சுப்பையா.. திருச்சி அதிமுக மகளிர் அணியை துடிப்புடனும், வலிமையுடனும் ஒருகாலத்தில் வழிநடத்தி சென்றவர்.. ஆனால், சீட் தராத காரணத்தினால் அதிருப்தியில் இருந்த இவர், கணவர் சுப்பையா பாண்டியனுடன் திமுகவுக்கு தாவினார். இவரும் மேயர் பதவிக்கு குறி வைத்துள்ளார்.. அடுத்த நபர் விஜயலட்சுமி.. இவர் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.. ஓரளவு செல்வாக்கு மிக்கவர் என்கிறார்கள்.

 யார் அவர்?

யார் அவர்?

இப்படி 5 பெண்கள் வரிசைக்கட்டி நிற்க, யாருக்கு மேயர் பதவி வரும் என்று தெரியவில்லை.. ஆனால், திருச்சிக்கு மேயர் பதவி அறிமுகமாகி, 25 வருடங்களில் மேயராக இருந்த அனைவருமே பெண்கள் தான் என்பது மிக முக்கியமான விஷயம்.. ஒருவேளை அந்த வரிசையில் இந்த முறையும் பெண்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுமா? அல்லது நேருவின் ஆதரவாளர் என்று சொல்லப்படுபவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்று தெரியவில்லை.. எதுவானாலும் பொறுத்திருந்து பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+