திருச்சி தொகுதிக்கு கடும் டிமாண்ட்! திமுகவிடம் முட்டி மோதும் 3 கட்சிகள்! ஸ்டாலின் கையில் முடிவு!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட 3 கட்சிகள் முட்டி மோதுவதால் திமுக தலைமை யாருக்கு வாய்ப்பு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் இதயமாக திகழக்கூடிய ஊர் திருச்சி. மாநிலத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் 4 மணி நேரம் முதல் 5 மணி நேரத்திற்குள் திருச்சியை சென்றடைய முடியும். திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை என 6 சட்டமன்ற தொகுதிகள் திருச்சி மக்களவைத் தொகுதிக்குள் வருகின்றன. முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம், தலித் எழில்மலை, ரங்கராஜன் குமாரமங்கலம், அடைக்கலராஜ், செல்வராஜ், என பல ஜாம்பவான்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தொகுதி திருச்சி.

Heavy demand for Trichy Parliament constituency

தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் சிட்டிங் எம்.பி.யாக உள்ளார். மீண்டும் அவரே திருச்சியில் போட்டியிட விரும்புகிறார். இதனால் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியை கேட்டு வாங்க காங்கிரஸ் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு சற்றும் சளைக்காமல் மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் திருச்சி தொகுதி மீது ஒரு கண் வைத்திருக்கின்றன. திமுக தொகுதி பங்கீட்டு குழுவிடம் அளிக்கப்பட்ட மதிமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலில் திருச்சியும் இடம்பெற்றிருக்கிறது.

அதுவும் குறிப்பாக திருச்சியில் துரை வைகோ போட்டியிட வேண்டும் என மதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல் தங்களுக்கு ராமநாதபுரம் தொகுதி கிடைக்காதபட்சத்தில் திருச்சியை எப்படியாவது கேட்டு வாங்கிவிட வேண்டும் என துடிக்கிறது முஸ்லீம் லீக். திருச்சி தொகுதி மீது திமுக கூட்டணிக் கட்சிகள் இந்தளவுக்கு விருப்பப்படுவதற்கு காரணம் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் தான். எப்பாடு பட்டும் தங்களை அவர்கள் இருவரும் வெற்றிபெற வைத்துவிடுவார்கள் என்பதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

இதற்கு மத்தியில் கூட்டணிக் கட்சிகளுக்கு இத்தனை ஆண்டுகளாக ஒதுக்கியது போதும், திமுக வேட்பாளரை இந்த முறை திருச்சியில் களமிறக்கலாம் என லோக்கல் திமுக நிர்வாகிகள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். திருச்சியை பொறுத்தவரை மிக முக்கியமான தொகுதி என்பதால் யாருக்கு ஒதுக்க வேண்டும் என்பது பற்றி முதல்வர் ஸ்டாலினே நேரடியாக முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+