Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீமான் போல் கெட்ட வார்த்தை பேசவா? நிருபரை ஒருமையில் திட்டி தீர்த்த காங் எம்பி திருநாவுக்கரசர்! ஷாக்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் ஒருமையில் திட்டினார். நீ யாரிடமோ கோசு வாங்கி கொண்டு இப்படி கேட்கிறாய். நீ என்ன பெரிய யோக்கியனா? உனக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. சீமான் மாதிரி கெட்ட வார்த்தையில் பேசினால் தான் நீயெல்லாம் அடங்குவாய் என காட்டமாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறையை போல் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. திமுக-காங்கிரஸ் கட்சி இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தாலும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இழுபறி நீடித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் தொகுதி பங்கீடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

I used bad words like seeman, Congress MP Thirunavukkarasar scolded reporter who asking question on him in Trichy

இத்தகைய சூழலில் தான் திருச்சி நாடாளுமன்ற தொகுதி கடந்த 2019 ல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டது. அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக தொடர்ந்து வருகிறார். வரும் தேர்தலில் மீண்டும் திருச்சியில் போட்டியிட திருநாவுக்கரசர் விரும்புகிறார். காங்கிரஸ் கட்சியும் திருச்சி தொகுதியை திமுகவிடம் கேட்டுள்ளது.

ஆனால் இந்த முறை திருச்சி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்க எதிர்ப்பு கிளம்பி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது திருச்சி தொகுதியை திமுக தான் போட்டியிட வேண்டும் என திமுகவினர் கூறி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க வைகோவின் மதிமுக திருச்சி தொகுதியை கேட்டு வருகிறது. இதனால் திருச்சி நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்ற திமுக, காங்கிரஸ், மதிமுக இடையே போட்டி உள்ளது.

இந்நிலையில் தான் இன்று திருச்சியில் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர் திருநாவுக்கரசர் எம்பியிடம், ‛‛ திருச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக அல்லது மதிமுகவுக்கு ஒதுக்கப்படுவதாக தகவல் வருகிறதே?'' என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு திருநாவுக்கரசர், ‛‛இந்த தொகுதியில் நாங்கள் தான் போட்டியிடுவோம். காங்கிரஸ் சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. இறுதி வடிவம் வரும்போது உங்களுக்கே தெரியவரும்'' என்றார்.

இதையடுத்து பத்திரிகையாளர், ‛‛திருச்சி எம்பியை காணவில்லை.. கண்டா வரச்சொல்லுங்கள் என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதே'' என்ற கேள்வியை கேட்டார். இந்த கேள்வியை கேட்டவுடன் திருநாவுக்கரசர் எம்பி கடும் கோபமடைந்தார். மேலும் பத்திரிகையாளரை ஒருமையில் திட்டினார். இதுதொடர்பாக திருநாவுக்கரசர் கூறுகையில், ‛‛நீங்கள் என்னை எத்தனை நாட்களாக பார்க்கிறீர்கள். நீங்கள் எந்த ரிப்போர்ட்டர். நீ உண்மையை சொல்லவில்லை, பொய் சொல்கிறாய். நீ யாரிடமோ காசு வாங்கி கொண்டு இப்படி சொல்கிறாய். இல்லாவிட்டால் யாருக்கோ அடிமையாகி இப்படி சொல்கிறாய். 3 வருடம் அல்ல. நான் 5 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறேன். நீ யாரிடமோ காசு வாங்கி கொண்டு இப்படி சொல்கிறாய். வேறு ஆள் கேள்வி கேளுங்கள்'' என்றார்.

அதுமட்டுமின்றி, ‛‛சீமான் பேசுவது போல் கெட்டவார்த்தையில் பேசினால் தான் நீ எல்லாம் அடங்குவாய் போல் தெரிகிறது. நீ என்ன பெரிய யோக்கியன் மாதிரி 3 ஆண்டுகளாக பார்க்கவில்லை என சர்ட்டிபிகேட் கொடுக்கிறாய். வேலையை பாருயா.. பிரஸ் என்றால் என்ன வேண்டுமானாலும் கேட்பியா? பேச்சை நிறுத்து. உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. இஷ்டம் இருந்தால் என்னை பேட்டி எடு. இல்லாவிட்டால் போய்க்கொண்டே இரு. நீ எந்த டிவி. நீ எந்த டிவியா? அதை சொல்லு. உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. மரியாதையாய் கேள்வி கேட்டால் மரியாதையாக பதில் சொல்வேன்.

தமிழ்நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் எம்பி படத்தை போடாமல் எம்பியை காணவில்லை என போஸ்டர் ஒட்டி உள்ளார்கள். திமுக, அதிமுகவினர் சார்பில் எல்லா எம்பியும் காணவில்லை என போஸ்டர் ஒட்டியுள்ளனர். திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் இங்கே தான் இருக்கிறோம். நீ எப்படி என்னை காணவில்லை என கேள்வி கேட்கலாம். நீ என்ன எதி்க்கட்சி தலைவரா? பேப்பர்க்காரன், டிவிக்காரன் என்றால் அவர்களை போல் கேள்வி கேட்க வேண்டும்'' என கடும் வார்த்தைகளால் சீறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+