இவர் மட்டும் நின்றால் திருச்சியில் பாஜக டெபாசிட் இழக்கும்.. திருச்சி சூர்யா பரபர பதிவால் அதிர்ச்சி!
திருச்சி: வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே திருச்சி பாஜகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சியில் பாஜக டெபாசிட் இழக்கும் என திருச்சி சூர்யா பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் மக்களவைத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்து, இன்று வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவிட்டது.

அதேசமயம், அதிமுக, பாஜக கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டன. இன்று மாலை அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடைய உள்ளது. இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளது அதிமுக. பாஜகவும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.
நாளைக்குள் பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பாஜக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. பாஜகவில் சீட் பெற பலரும் காய்களை நகர்த்தி வருகின்றனர். அந்தவகையில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் ராம சீனிவாசன், விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ராம சீனிவாசன் திருச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் பரவியது. திமுக கூட்டணியில் திருச்சியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ களமிறங்குகிறார். அவரை எதிர்த்து, ராம சீனிவாசனை களத்தில் இறக்குவது பற்றி பாஜக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் பரபரத்தன.
இந்நிலையில், வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பாகவே திருச்சி பாஜகவில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளரான திருச்சி சூர்யா சிவா, எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார். "வேடந்தாங்கல் பறவைகள் வேண்டாம்" என ராம.சீனிவாசன் திருச்சியில் நிற்பதற்கு எதிராக பதிவிட்டுள்ளார் திருச்சி சூர்யா சிவா.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வெளி மாவட்டத்தைச் சேர்ந்த இராம சீனிவாசனை திருச்சியில் களமிறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும். வெற்றியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மாறாக, மண்ணின் மைந்தரை களமிறக்கினால் திருச்சியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இப்படிக்கு - பாஜகவின் உண்மைத் தொண்டன் திருச்சி சூர்யா" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் செல்போனில் உரையாடியபோது இழிவான சொற்களால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி, விசாரணை நடத்தப்பட்ட பின்னர் திருச்சி சூர்யா சிவா 6 மாத காலத்துக்கு பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் மீண்டும் பாஜகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் திருச்சி சிவா. சூர்யா சிவா, அவர் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, பாஜகவில் பணியாற்றி வருகிறார் திருச்சி சூர்யா. இந்நிலையில், லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், ராம.சீனிவாசனை திருச்சியில் நிறுத்தினால் பாஜக டெபாசிட் இழக்கும் எனக் கூறி அதிர வைத்துள்ளார் திருச்சி சிவா. திருச்சி தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படுமா அல்லது பாஜக போட்டியிடுமா என்பதே இன்னும் உறுதியாகாத நிலையில், பாஜகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications