கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால்... 1 கிலோ தக்காளி இலவசம்... திருச்சியில் புதுமையான முயற்சி..!
திருச்சி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 1 கிலோ தக்காளி இலவசம் என்ற அறிவிப்பு திருச்சி மாவட்டம் புங்கனூர் பஞ்சாயத்தில் நடைமுறையில் உள்ளது.
பொதுமக்களை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், இன்னும் கிராமப்புறங்களில் அது தொடர்பான போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட புங்கனூர் பஞ்சாயத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை நூதன முறையில் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இலவச தக்காளி வழங்கப்படுவதாக காரணம் கூறப்படுகிறது.
ஊராட்சி மன்றத் தலைவர் தாமோதரன் ஏற்பாட்டில் இந்த புதுமையான முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. கேட்பதற்கும், பார்ப்பதற்கும் விந்தையாக தெரிந்தாலும் கிராம மக்கள் மத்தியில் இலவச தக்காளிக்கு ஓரளவு வரவேற்பு உள்ளதை காண முடிகிறது.
இதனிடையே தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு சேர்த்து, முகக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சமூக இடைவெளி குறித்தும் சுகாதாரத்துறை விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications