"காங்கிரஸை மட்டும் மையப்படுத்தி இருக்கு.. சுதந்திர வரலாற்றையே நாம் திருத்தி எழுதணும்!" ஆளுநர் ரவி
திருச்சி: இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாறு என்பது காங்கிரஸை மட்டும் மையப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அதை நாம் திருத்தி எழுத வேண்டும் என்றும் கூறினார்.
திருச்சி தேசிய கல்லூரி மற்றும் தேசிய சிந்தனை கழகம் இணைந்து சுதந்திர திருநாள் அமுத பெருவிழா, மகாகவி பாரதியார் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாகவும் மற்றும் ராமலிங்க வள்ளலாரின் 200வது பிறந்த தினத்தையும் கொண்டும் வகையில் நிகழ்ச்சியை ஏற்படு செய்திருந்தது.
மூன்றையும் சிறப்பிக்கும் வகையில் "முப்பெரும் விழா" திருச்சி கருமண்டபம் அருகே உள்ள தேசிய கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்திய விடுதலைப்போரில் தென்னிந்திய மொழிகளின் பங்களிப்பு என்கிற கருத்தில் இந்த முப்பெரும் விழா நடைபெற்றது.

காங்கிரஸை மட்டும்
இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "நம் நாட்டில் இந்திய விடுதலை போராட்டம் மிகப்பெரிய இயக்கமாக நடந்தது. அதில் ஏராளமானோரின் பங்களிப்பு இருந்தது. அன்றைய காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் இருந்தது. அதில் இருந்தவர்களும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்கள். ஆனால் அவர்களைத் தவிர ஏராளமானோரும் பங்கேற்றார்கள். ஆனால் இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாறு இந்தியத் தேசிய காங்கிரஸை மட்டும் மையப்படுத்தப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

தன்னிச்சையான போராட்டம்
அந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு உயிர்த் தியாகம் செய்துள்ளனர். கிராமம் கிராமமாகப் போராட்டங்கள் நடந்துள்ளது.. எனவே சுதந்திரப் போராட்டம் மக்களை மையப்படுத்தி ஆவணப்படுத்தப்படுத்தும் வகையில் திருத்தி எழுதப்பட வேண்டும். பிரிட்டிஷ் வருகைக்கு முன் இந்தியக் கிராமங்கள் தன்னிறைவாகவே இருந்தன. ஆனால் அவர்கள் வருகைக்குப் பின் அதிகப்படியான வரிகள் விதிக்கப்பட்டு. இதை எதிர்த்து கிராமங்களில் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவர்களும் சுதந்திரத்திற்காகத் தான் போராடினார்கள். சுதந்திரத்திற்காகப் போராடிய அனைவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தான்.

பிரதமர் மோடி
இன்று சுதந்திரப் போராட்ட வீரர்களை ஆவணப்படுத்த அவர்களின் சிறை சென்ற ஆவணங்களைக் கேட்டால்.. பென்சனுக்காக என நினைத்துக் கொண்டு சுய மரியாதை காரணமாகப் பலர் அந்த ஆவணங்களைத் தரமாட்டார்கள். அதனால் அவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படாமல் போய்விடும்.. எனவே அதையெல்லாம் முறைப்படுத்த வேண்டும். நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தான் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து மக்களுக்கு அதிகம் தெரிந்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸே அவ்வாறு தான் மக்களுக்குத் தெரிந்தார்.

காலனியாதிக்க சிந்தனை
நான் தமிழ்நாட்டிற்கு வந்த பொழுது தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பட்டியல் கேட்டேன்.. அப்போது வெறும் 30 பேர் பட்டியல் மட்டுமே அவர்கள் தான் தந்தார்கள்.. அந்த விஷயத்தில் நான் முழு கவனம் செலுத்தத் தொடங்கினேன். இப்போது 800-க்கும் அதிகமானோரின் பெயர்கள் அந்தப் பட்டியலில் உள்ளது. இன்றும் காலனியாதிக்க சிந்தனை நம் மனத்தில் உள்ளது. காலனியாதிக்க சிந்தனை எச்சத்தின் வெளிப்பாடே ஆங்கில மொழிதான் உயர்ந்தது என்கிற எண்ணம். ஆனால் நம் தமிழ், சமஸ்கிருதம் போன்றவை ஐரோப்பிய மொழிகளைக் காட்டிலும் வளம் மிக்கவை. இதை நாம் உணர வேண்டும்.

வேலூர் சிப்பாய் கலகம்
1857ஆம் ஆண்டு தான் சுதந்திரப் போராட்டம் தொடங்கியதாக வரலாற்றில் பதிவாகி உள்ளது. ஆனால் 1806ஆம் ஆண்டே சிப்பாய் கலகம் வேலூரில் நடந்தது.. அதில் பல பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டார்கள். காலனி ஆதிக்கம் தொடங்கிய போதே அதை எதிர்த்து நாம் போராடினோம்.. அவையெல்லாம் பதிவு செய்ய வேண்டும். நம் மக்களின் அடையாளம், கலாச்சாரம் போன்றவற்றை அழிக்கப் பிரிட்டிஷ் முயன்ற போதே அதை எதிர்த்துப் போராடியுள்ளோம்.

ஆயுத போராட்டம்
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அகிம்சை போராட்டம் தான் அதிக அளவு பதிவாகி உள்ளது. ஆயுத போராட்டங்கள் அதிகம் பதிவாக வில்லை.. அவற்றையும் பதிவு செய்ய வேண்டும். சுதந்திரப் போராட்டம் என்பது எழுதப்பட்டும் இருக்கும், எழுதப்படாமல் நாடகம் உள்ளிட்ட கலைகளாகவும் இருக்கும் எனவே அவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் கோடிக்கணக்கானோர் போராடி உள்ளார்கள். பலர் உயிர்த் தியாகம் செய்துள்ளார்கள். அவர்கள் பலரின் வரலாறுகள் பதிவு செய்யப்படாமல் உள்ளது. எனவே ஆராய்ச்சி மாணவர்கள், வரலாற்று அறிஞர்கள் போன்றோர் இந்த வரலாற்றைச் சரியாகவும் முறையாகவும் ஆவணப்படுத்தி அதைத் திருத்தி எழுத வேண்டும்" என்று அவர் பேசினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications