கடுமையான வெயில் அடிக்குது! கொஞ்சம் பொறுத்துகங்க! சலசலப்பை கட்டுப்படுத்திய எடப்பாடி பழனிசாமி!
திருச்சி: சொத்து வரி உயர்வை கண்டித்து திருச்சியில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
மண்டையை பிளக்கும் அளவுக்கு சுட்டெரித்த வெயிலால் கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்களிடையே ஒரு கட்டத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டதை, தனது சாதுர்யமான பேச்சால் கட்டுக்குள் கொண்டு வந்தார் அவர்.
''கடுமையான வெயில் அடிக்குது, கொஞ்சம் பொறுத்துகங்க, வேறு வழியில்லை, இதைவிட கடுமையான பாதிப்புகளை அரசு கொடுத்து வருகிறது'' எனக் கூறி தனது பேச்சைத் தொடர்ந்தார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை கண்டித்து திருச்சியில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் காலை 11 மணிக்கு மேடையேறினார் எடப்பாடி பழனிசாமி. திருச்சி ரயில் நிலையம் பின்புறம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்காக காலை 8.30 மணி முதலே தொண்டர்கள் குவிக்கப்பட்டு வந்தனர். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட நிர்வாகிகளையும், தொண்டர்களையும் திரட்டிய அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அவர்களுக்கு தண்ணீர் பாட்டில் சிற்றூண்டி உள்ளிட்டவைகளை கொடுத்தனர்.

சுட்டெரித்த வெயில்
நேரம் செல்லச் செல்ல வெயில் மண்டையை பிளக்கத் தொடங்கியதால் ஆர்ப்பாட்ட மேடைக்கு கீழே நின்ற தொண்டர்கள் கூட்டத்தில் லேசான சலசலப்பு ஏற்படத் தொடங்கியது. இதையறிந்த எடப்பாடி பழனிசாமி சட்டென தனது பேச்சை நிறுத்தி, ''கடுமையான வெயில் அடிக்குது, கொஞ்சம் பொறுத்துகங்க, வேறு வழியில்லை, இதைவிட கடுமையான பாதிப்புகளை அரசு கொடுத்து வருகிறது''எனத் தெரிவித்தார். இதையடுத்து மீண்டும் தனது பேச்சை அவர் தொடர்ந்தார்.

தொப்பி மிஸ்ஸிங்
ஜெயலலிதா காலத்தில் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பகல் நேர பிரச்சாரக் கூட்டங்களின் போது வெயிலுக்காக அதிமுக தொண்டர்களுக்கு கேப் கொடுப்பது வழக்கமாக இருக்கும். ஆனால் இன்றைய ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கேப் கொடுத்தது போல் தெரியவில்லை. இதனிடையே இலக்கணத் தமிழில் உரை நிகழ்த்தாமல் பேச்சு மொழியிலேயே நடப்பு விவகாரங்கள் குறித்தும் திமுக அரசு பற்றியும் எடப்பாடி பழனிசாமி பேசியது கூட்டத்தில் இருந்தவர்களை ஓரளவு கவனிக்க வைத்தது.

எல்லோரும் ஆஜர்
திருச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் மாஜி அமைச்சர்கள் அனைவரும் ஒருவர் விடாமல் ஆஜராகியிருந்தனர். அதேபோல் திருச்சி மாவட்டத்தில் உள்ள அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.க்கள், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என எல்லோரும் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கம் வைத்து தங்கள் வருகையை உறுதிப்படுத்தி பதிவு செய்து கொண்டனர்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications