"பிச்சையில் வந்த பதவி இதுவல்ல".. ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்ய கூறிய சீமானுக்கு திருச்சி எஸ்பி பதிலடி
திருச்சி: ‛‛பிச்சை எடுத்தோ, திரள் நிதியிலேயோ வந்தது அல்ல ஐபிஎஸ் பதவி. பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால் நான் காக்கிச் சட்டையை கழற்றுவது பற்றி யோசிக்கிறேன். நான் காக்கிச்சட்டையில் இருப்பது அவ்வளவு பயமோ? என சீமானுக்கு திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
திருச்சி மாவட்ட எஸ்பியாக இருப்பவர் வருண் குமார் ஐபிஎஸ். இவருக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் இடையேயான மோதல் என்பது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இஅதாவது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் பாடிய புகாரில் சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்தனர்.

இதற்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் எஸ்பி வருண் குமாரை அவர் விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக சீமான் கூறுகையில், ‛‛திருச்சி எஸ்பியாக வருண் உள்ளார். தேவர், நாடார், கோணார், தேவேந்திரர்கள் என யாரையுமே அவருக்கு பிடிக்கவில்லை. எங்கள் மீது வெறுப்பு உள்ளது. துரைமுருகனை (சாட்டை துரைமுருகன்) சென்னைக்கு வர சொல்லி குண்டாஸில் போட்டது வருண் ஐபிஎஸ்தான். இப்போதும் சாட்டை துரைமுருகனை கைது செய்து திருச்சிக்கு கொண்டு வருவதும் வருண் ஐபிஎஸ்தான். இதையெல்லாம் மறந்துவிடுவோமா?'' என்று கூறியிருந்தார்.
இதற்கு வருண் குமார் சாதிகள் இல்லையடி பாப்பா என பதிலடி கொடுத்து இருந்தார். மேலும் வருண் குமார் ஐபிஎஸ் சார்பில் வழக்கறிஞர் மூலம் சீமானுக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பினார். அதன்பிறகு சமூக வலைதளங்களில் வருண் குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தை சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் மிரட்டலும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வருண் குமார் அளித்த புகாரில் நாம் தமிழர் நிர்வாகிகள், அந்த கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீமான் உள்பட முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் வருண்குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவியான ஐபிஎஸ் அதிகாரி வந்திதா பாண்டே ஆகியோர் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறி உள்ளனர். இதற்கிடையே இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வருண் குமார் ஐபிஎஸ்க்கு சவால் விடுத்தார்.
இதுதொடர்பாக சீமான், ‛‛திமுக ஐடி விங்கில் வேலை பார்த்தார் என்றால் ஏன் ஐபிஎஸ் வேலை பார்க்க வேண்டும். இந்த வேலையை ரிசைன் செய்துவிட்டு திமுக ஐடி விங்கில் வேலை பார்க்க வேண்டும். பெரிய வீரர் என்றால் ஐபிஎஸ் பதவியை ரிசைன் செய்துவிட்டு நேருக்கு நேர் மோத வேண்டும். தமிழ்நாட்டில் நிறைய ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கின்ற போது உங்களுடன் மட்டும் எங்களுக்கு என்ன பகை இருக்கிறது? ஏன் பகை வருகிறது? நீங்கள் தான் உருவாக்குகிறீர்கள்.
எங்களோடு மோதி உங்கள் பெயர் அடிபட வேண்டும். உங்களை டிவியில் தினமும் சொல்ல வேண்டும். அதற்கு ஆசை என்றால், அப்படி பெரிய வீரர் என்றால் வாங்க நேருக்கு நேர் மோதுவோம். அதிகாரத்தில் இருந்து வழக்கு போடுவது எதற்கு. புதுசா வழக்க பார்க்க போகிறேறானா.. இல்லை.. என் மீது 138 வழக்குகள் இருக்கிறது. நீங்க கூலிக்கு வேலை செய்றீங்க. நான் கொள்கைக்காக போராடுகிறேன். அதனால் இதுஎல்லாம் எங்களுக்கு சாதாரணம். பார்த்து விளையாடுங்கள்'' என காட்டமாக பேசினார்.
இந்நிலையில் தான் சீமானுக்கு, வருண் குமார் ஐபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛பிச்சை எடுத்தோ, திரள் நிதியிலேயோ வந்தது அல்ல, இரவு பகலாக ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி படித்து உழைத்து பெற்ற பதவி ஐபிஎஸ். உயிரை போல் நேசித்து தேர்ந்தெடுத்த காக்கி சட்டை இது. என்றும் காக்கி மேல் உள்ள காதல் தொடரும். பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால் நான் காக்கி சட்டையை விடுவது பற்றி யோசிக்கிறேன். நான் காக்கி சட்டையில் இருப்பத அவ்வளவு பயமா?'' என பதிலடி கொடுத்துள்ளார்.
-
ஓரே வருஷத்தில் மதுக்கடைகள் மூடப்படும்.. கல்விக்கடன் தள்ளுபடி.. சீமான் தேர்தல் வாக்குறுதி -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications