கிராமப்புறங்களை பார்த்தால் எப்படி இருக்குது சார்? அரசுக்கு அவப்பெயரை தேடித் தருகிறதா மின்வாரியம்?
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள வையம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட பல கிராமங்களில் அறிவித்ததை விட இரண்டரை மணி நேரம் கூடுதலாக மின் தடை ஏற்படுத்தப்பட்டது மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதித்ததாக புகார் எழுந்துள்ளது.
மின்சாரம் வருவதற்கு இன்னும் கொஞ்ச நேரம் தாமதமாகியிருந்தாலும் சாலை மறியல் நடக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கும். மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமையான இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை மின் வாரிய செயற்பொறியாளர் ஆர்.அன்புச்செல்வன் முறைப்படி முன்கூட்டியே நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.

பிறகென்ன ஷட் அவுன் குறித்த அறிவிப்பு தான் தெரிவிக்கப்பட்டுவிட்டதே, பிறகென்ன பிரச்சனை என்ற கேள்வி எழலாம். காலை 9.45 முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளர் ஆர்.அன்புச்செல்வன் தெரிவித்திருக்கிறார். 3 மணிக்கு கரண்ட் வந்துவிடும் எனக் கூறிவிட்டு 5.30 மணிக்கு, அதுவும் பொதுமக்கள் போன் மேல் போன் போட்டு கோபத்தை கொட்டத் தொடங்கிய பிறகு மின் விநியோகம் தரப்பட்டது தான் இங்கு குறிப்பிடத்தக்கது.
இளங்காகுறிச்சி, வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்ரோடு, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை பழையகோட்டை, குரும்பம்பட்டி, சரளப்பட்டி, சேசலூர், பாலப்பட்டி, அம்மாபட்டி, எ.ரெட்டியட்டி, முள்ளிப்பாடி, ஆர்.எஸ்.வையம்பட்டி, தொப்பாதாயக்கன்பட்டி, எ.இடையபட்டி, இ.கோவில்பட்டி, டி.கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி(கிடங்குடி), என்.புதூர், தாமஸ்நகர், அஞ்சல்காரன்பட்டி, ஆவாரம்பட்டி, குரும்பபட்டி, வலையப்பட்டி, நடுப்பட்டி, ராமரெட்டிபட்டி, கூவூர், கண்ணூத்து, எளமணம், புதுவாடி சீத்தப்பட்டி, துலுக்கம்பட்டி மேலக்கல், புறந்தாக்குடி, குமாரவாடி, ஓந்தாம்பட்டி, செக்கணம், கனத்துப்பட்டி, ஜக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பெரிய அணைக்கரைப் பட்டி, முகவனூர், சின்ன அணைக் கரைப்பட்டி, புதுமணியாரம்பட்டி, பாம்பாட்டிபட்டி, பொன்னியாறு அணை, என பல கிராம மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிகுள்ளாகி உள்ளனர்.
இதேபோல் நகர்ப்புறங்களில் மின் வாரிய அலுவலர்களால் சாவகாசமாக மின் விநியோகம் செய்ய முடியுமா என்பது மேற்கண்ட கிராமமக்களின் கேள்வியாக உள்ளது. நகர்ப்புறங்களில் சொன்ன நேரத்தை விட மின்சாரம் வருவதற்கு 15 நிமிடம் தாமதமானாலும் பெரும் பிரளயமே உருவாகிவிடும். மின் வாரியத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு சீரமைப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஒரு சில மின் வாரிய அலுவலர்களால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதனிடையே இந்தப் புகார் பற்றி விளக்கமறிய மணப்பாறை டி.இ.யை தொடர்பு கொண்டோம். மீட்டிங்கில் இருப்பதாக குறுந்தகவல் அனுப்பிவிட்டு கடைசி வரை விளக்கம் தரவில்லை. அதேபோல் ஏ.இ.யிடம் விளக்கம் கேட்ட போது, ''டேமேஜ் போல் மாற்றினோம், இன்னைக்கு ஒரு பொழுது கொஞ்சம் லேட் ஆகிடுச்சு சார்'' எனத் தெரிவித்தார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications