திருப்பதிக்கு ரயிலில் போக போறீங்களா.. உங்களுக்கு முக்கியமான அறிவிப்பினை வெளியிட்ட ரயில்வே
திருச்சி: திருப்பதியில் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக, திருப்பதி செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. எந்தெந்த ரயில்கள் எப்படி இயங்கும் என்பதையும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து திருப்பதிக்கு பலரும் ரயிலில் செல்ல அடுத்த ஒரு மாதத்திற்கு முன்பதிவு செய்துள்ளார்கள். ஆனால் ஆகஸ்ட் 10ம் தேதி வரை தற்காலிகமாக ரயிலில் திருப்பதி செல்ல முடியாது. ஏனெனில் பராமரிப்பு பணிகள் திருப்பதியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக ரேணிகுண்டா வரை சில ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சில ரயில்கள் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: திருப்பதியில் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால், புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 2.55 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி - திருப்பதி மெமு முன்பதிவற்ற விரைவு ரயிலானது (16112) ரேணிகுண்டா - திருப்பதி இடையே ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, மறுமாா்க்கமாக திருப்பதியிலிருந்து காலை 4.10-க்கு புறப்படும் திருப்பதி - புதுச்சேரி மெமு முன்பதிவற்ற விரைவு ரயிலானது (16111) திருப்பதி - ரேணிகுண்டா இடையே ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது ரேணிகுண்டாவிலிருந்து காலை 4.50 மணிக்குப் புறப்பட்டு செல்லும்.
ஏற்கெனவே மண்டபம் - ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ள ராமேசுவரம் - திருப்பதி விரைவு ரயிலானது (16780) பாக்லா - திருப்பதி இடையே ஜூலை 13, 14, 16, 20, 21, 23, 27, 28, 30, ஆகஸ்ட் 3, 4, 6, 10 ஆகிய நாள்களில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, மறுமாா்க்கமாக திருப்பதி - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16779) திருப்பதி - பாக்லா இடையே ஜூலை 14, 15, 17, 21, 22, 24, 28, 29, 31, ஆகஸ்ட் 4, 5, 7 ஆகிய நாள்களில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் பாக்லாவிலிருந்து நண்பகல் 12.30 மணிக்குப் புறப்பட்டு செல்லும்.
விழுப்புரத்திலிருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - திருப்பதி இன்டா்சிட்டி விரைவு ரயிலானது (16854) காட்பாடி - திருப்பதி இடையே ஆகஸ்ட் 10 ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மறுமாா்க்கமாக, திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்படும் திருப்பதி - விழுப்புரம் இன்டா்சிட்டி விரைவு ரயிலானது (16853) திருப்பதி - காட்பாடி இடையே ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காட்பாடியிலிருந்து மாலை 4.35 மணிக்குப் புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications