திருவாரூர்.. திமுகவுக்கு முதல் கட்சியாக முஸ்லீம் லீக் ஆதரவு.. வெற்றிக்கு வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருவாரூர் இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தருவதாகவும், புத்தாண்டு செய்தியாக வந்துள்ள இடைத் தேர்தல் அறிவிப்பை வரவேற்பதாகவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் காதர்மொகிதீனின் அறிக்கை:

புத்தாண்டு செய்தியாக திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது மிகுந்த வரவேற்புகுரியதாகும்.

IUML Wishes DMK for victory in Thiruvarur by election

2019ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் ஏற்றத்திற்கும், இன்றைய தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையின் வெற்றிக்கும் வரவேற்பு கூறும் ஆண்டு என்பதில் எந்த ஐயமுமில்லை.

டாக்டர் கலைஞர் அவர்கள் பிறந்து, வாழ்ந்து , சிறந்து இருமுறை வென்று, புகழ் உச்சியில் நின்று உலகத் தலைவர்கள் பட்டியலில் உச்ச நிலையைத் தொட்டவர் என்னும் பெருமைக்குரியவர் டாக்டர் கலைஞர். அவரது தொகுதியில் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற இடைத் தேர்தலில் டாக்டர் கலைஞரின் புகழுக்கு மேலும் பெருமையையும், புகழையும் சேர்க்கும் வகையில் உதயசூரியன் வெற்றியைத் தரும்.

புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கலைஞரின் நல்லாட்சி மீண்டு மலர்ந்திட திருவாருர் இடைத் தேர்தல் வழிகாட்டும். இந்த தேர்தலில் டாக்டர் கலைஞர் அவர்களின் பிரதிநிதியாக போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு எல்லா சமுதாய மக்களும் இதயப்பூர்வமாக வாழ்த்து கூறி, டாக்டர் கலைஞர் அவர்களின் சாதனைக்கு நன்றி செலுத்தும் விதமாக அமோகமான வெற்றியை அளிப்பார்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்கு எல்லா வகையிலும் உழைத்து பாடுபடும். இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் உதயசூரியன் வெற்றிக்கு ஓயாமல் உழைத்து தேர்தல் பணி துவங்கி வெற்றிக் கனியை பறிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+