ராமேஸ்வரத்துக்கு வந்தாரே! தூத்துக்குடிக்கு ஏன் பிரதமர் போகலை? பாஜக தேறாது.. கி. வீரமணி காட்டம்
திருச்சி : தென்மாநிலங்களில் பாஜகவால் எப்போதுமே வெற்றி பெற முடியாது என்று திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.
மாா்க்சிஸ்ட் கட்சியின் சாா்பில் திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினா். மாநில உரிமைகள் மீதான தாக்குதல், எதிா்க்கட்சி ஆளும் மாநிலங்களை நிதிப் பகிா்வில் வஞ்சிப்பது, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை உள்ளிட்ட மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிா்க்கட்சித் தலைவா்களை பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும், அத்துமீறும் மாநில ஆளுநா்களின் செயல்பாடுகளையும், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சி மாநகா் மாவட்டத்தின் சாா்பில், சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகா் மாவட்ட செயலாளா் ஆா் .ராஜா தலைமை வகித்தாா். புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன் முன்னிலை வகித்தாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி பேசினார். பின்னர் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது: உதிா்ந்த சருகுகளை வைத்து தோரணம் கட்ட முயற்சிக்கிறாா் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை. தென் மாநிலங்களில் பாஜக-வால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. குறிப்பாக தமிழகத்தில் எப்போதுமே வெற்றிபெற மாட்டாா்கள்.
பாஜக-வைப் பொருத்தமட்டில் வெற்றிபெற்றாலும் ஆள வேண்டும். தோற்றாலும் ஆள வேண்டும் என்று நினைக்கின்றனா். அதற்கு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனா். சண்டிகா் மேயா் தோ்தலில் தோ்தல் அதிகாரியையே விலைக்கு வாங்கினா்.
அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ ஆகியவற்றை எதிா்க்கட்சிகள் மீது ஏவுகிறது மத்திய பாஜக அரசு.
இந்தியா கூட்டணியில் ஒருவா் வெளியே போனால்கூட பெரிதாக விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தில் எந்தக் கட்சியும் சேராதது குறித்து யாரும் பேசுவதில்லை. பகிரங்கப்படுத்துவதுமில்லை. தமிழக சுற்றுப்பயணத்தில் ராமேஸ்வரம் வந்த பிரதமா் நரேந்திரமோடி, அருகில் உள்ள தூத்துக்குடிக்கு ஏன் செல்லவில்லை. தமிழக அரசு கோரிய பேரிடா் நிவாரண நிதியையும் வழங்கவில்லை.
தமிழகத்தைச் சோ்ந்த எல்.முருகன், மத்திய அமைச்சராக இருந்தாலும் அவா், தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. எனவே, அவா் வகிக்கும் பதவிக்கு தகுதியற்றவா் என டி.ஆா். பாலு கூறியுள்ளாா். ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்படும்போது பாஜக எந்தவித குரலும் அளிக்கவில்லை. மணிப்பூருக்கு செல்லக் கூட மனம் இல்லை.
தமிழகத்தில் தேமுதிக, பாமக-வின் அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், ஏலம் போடும் அரசியலை தேமுதிகவும், பாமகவும் மாற்றிக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications