கருணாநிதிக்கு இரங்கற்பா எழுதியதால் டிரான்ஸ்பர்.. பணியையே துறந்த பெண் காவலர் செல்வராணி
Recommended Video

திருச்சி: கருணாநிதிக்கு இரங்கற்பா எழுதியதால் இடமாற்றம் செய்யப்பட்ட காவலர் செல்வராணி, விருப்பு ஓய்வு மூலம் தனது வேலையையே துறந்தார்.
கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானார். அவரது இலக்கியத்தின் மீது பற்று கொள்ளாதவர்களே இல்லை. அந்த வகையில் திருச்சியைச் சேர்ந்தவர் செல்வராணி ராமச்சந்திரன். அவர் திருச்சியில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இவர் ஒரு கவிஞர். திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கோவை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடக்கும் கவியரங்கம், பட்டிமன்றங்களிலும் பங்கேற்று வருகிறார்.

பணியிடமாற்றம்
இவர் கருணாநிதிக்கு இரங்கற்பா எழுதியுள்ளார். இந்த கவிபாவின் வீடியோ சுமார் 5.44 நிமிடங்கள் ஆகும். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் செல்வராணி திருச்சி நுண்ணறிவுப்பிரிவில் இருந்து மத்திய மண்டல காவல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

விருப்பம் இல்லை
இதுகுறித்து செல்வராணி கூறுகையில் கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த காரணத்துக்காக என்னை பணியிட மாற்றம் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. அதுபோல் என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியது தவறு என்று சொல்லும் நிர்வாகத்திற்கு கீழ் தனக்கு பணிபுரிய விருப்பம் இல்லை.

கவிதை வாசித்தேன்
இரங்கற்பா பாடியது குறித்து விளக்கம் கேட்டு அதை நான் அனுப்புவதற்குள் என்னை எப்படி பணியிட மாற்றம் செய்யலாம். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. இதுபோன்ற ஜெயலலிதா காலமான போதும் கவிதை வாசித்தேனே அப்போது ஏன் இந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

செல்வராணிக்கு கடிதம்
எனவே விருப்ப ஓய்வு பெறுகிறேன் என கடிதம் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து பணிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் 3 மாத தொடர் மருத்துவ விடுப்பில் இருந்தார். இதையடுத்து செல்வராணியின் விருப்ப ஓய்வை ஏற்றுக் கொள்வதாக மாநகர ஆணையர் அலுவலகத்தில் இருந்து செல்வராணிக்கு கடிதம் வந்தது. இதையடுத்து செல்வராணி விருப்ப ஓய்வு பெற்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications