திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சியில் வாட்டர் கேனில் நிரப்பப்பட்ட மது.. சாக்குப் பையில் போட்டு புதருக்குள் வீசப்பட்ட மர்மம்

Google Oneindia Tamil News

திருச்சி: மணப்பாறையில் மதுவை தரையில் ஊற்றுவது போல நடித்து வாட்டர் பாட்டிலில் மதுவை நிரப்பி புல் தரைக்குள் பதுக்கி வைத்ததாக ஒரு பரபரப்பு எழுந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் மதுக்கடைகளில் அதிகம் பேர் கூடினால் சமூக விலகல் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் மதுக்கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன.

அந்த ''கட்டுரையை'' வெளியிட தடை.. கொரோனா எப்படி தோன்றியது?.. ஆராய்ச்சிகளுக்கு தடை விதித்த சீன அரசு! அந்த ''கட்டுரையை'' வெளியிட தடை.. கொரோனா எப்படி தோன்றியது?.. ஆராய்ச்சிகளுக்கு தடை விதித்த சீன அரசு!

மதுபாட்டில்கள்

மதுபாட்டில்கள்

திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிக்கும் பணி நடைபெற்றது. அப்போது காவல் நிலையத்தின் ஒரு பகுதியில் மதுபாட்டில்களை திறந்து மதுவை கீழே ஊற்றி விட்டனர்.

சாக்கில்

சாக்கில்

ஆனால் அந்த பணிகள் எல்லாம் முடித்து சென்று விட்ட பின்னர் அங்குள்ள புதர் போன்ற பகுதியில் சில மதுபாட்டில்கள் அப்படியே ஒரு சிறிய சாக்கில் இருப்பது தெரியவந்தது. இதுமட்டுமின்றி ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலிலும் முழுவதுமாக மதுவை நிரப்பி புதருக்குள் மறைத்தும் சாக்குப் பைகளில் முழு பாட்டிலை வைத்து இருந்தது தெரியவந்தது. இதை யார் செய்தார்கள் என தெரியவில்லை.

மதுபாட்டில்கள்

மதுபாட்டில்கள்

பின்னர் இதுதொடர்பாக தகவல் அறிந்த செய்தியாளர்கள் சிலர் சம்பவ இடத்திற்கு சென்று அதை காட்சிகளாக பதிவு செய்வது பற்றி தகவல் அறிந்த போலீசார் மீண்டும் வந்து அந்த மதுபாட்டில்களை மீண்டும் அந்த இடத்திலிருந்து பறிமுதல் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில் அந்த மதுபாட்டில்களை திறக்க முடியாததால் அப்படியே விட்டுச் சென்றதாக கூறினர்.

கோரிக்கை

கோரிக்கை

ஆனால் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் முழுவதுமாக மது நிரப்பப்பட்டது எப்படி என்பது தெரியவில்லை. இதனால் இந்த மதுபாட்டில்களின் ரகசியத்தை அறிய உயரதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கி உள்ளது.

English summary
Liquor bottles are found near bushes after it was seized at Manapparai in Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X