ஊரடங்கு மீறல்: மணப்பாறை போலீஸ் ஸ்டேஷனில் நிரம்பி வழியும் பைக்குகள்.. போலீசார் அதிரடி!
மணப்பாறையில் 400 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன
திருச்சி: மணப்பாறை போலீஸ் ஸ்டேஷன் வாசலில் 400க்கும் மேற்பட்ட பைக்குகள் நிரம்பி வழிகின்றன.. இதற்கு காரணம் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் ரோட்டில் சுற்றி வரும் நபர்களை வளைத்து பிடித்து, அவர்களது பைக்குகளைதான் பறிமுதல் செய்து வைத்துள்ளனர் போலீசார்!!
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வாகனங்களில் செல்ல போலீசார் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் பல இடங்களில் இந்த விதி மீறப்பட்டு வருகிறது... அவர்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முதலில் கண்டித்து பார்த்தனர்.. பிறகு தோப்புக்கரணம் உள்ளிட்ட நூதன தண்டனை தந்தனர்.. அப்போதும் சிலர் ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றியதால் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.,. அந்த வகையில் மணப்பாறை, அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பொதுமக்கள் பலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் பைக்கில் வலம் வந்தபடி இருந்தனர்.
இவர்கள் மீதுதான் மணப்பாறை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது... வழக்குப் பதிவு செய்துள்ளதுடன், அவர்கள் ஓட்டி வந்த பைக்குகளையும் பறிமுதல் செய்து மணப்பாறை போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தி வருகிறார்கள். இதில் மணப்பாறை போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் மட்டும் 630-க்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி புத்தாநத்தம், வையம்பட்டி, துவரங்குறிச்சி, வளநாடு ஆகிய போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் 400-க்கும் மேற்பட்ட பைக் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மணப்பாறை போலீஸ் நிலைய வளாகத்தில் பைக்குகளின் அதிகரித்து வருகிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications