திருச்சி மேயர் ஆகிறார் மு.அன்பழகன்! துணை மேயர் பதவிக்கு திமுகவில் இருமுனைப் போட்டி!
திருச்சி: அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான மு.அன்பழகனுகு திருச்சி மாநகராட்சி மேயர் பதவி உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி மாநகராட்சி வரலாற்றில் தொடர்ந்து 5 முறை மாநகராட்சி கவுன்சிலராக வெற்றிபெற்றவர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் மு.அன்பழகன்.
இதனிடையே திருச்சி மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கு மதிவாணன் மற்றும் விஜயா ஜெயராஜ் இடையே கடும் போட்டி உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாநகராட்சி
திருச்சி மாநகராட்சி 27-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள மு.அன்பழகன், இதற்கு முன் இரண்டு முறை துணை மேயராக இருந்திருக்கிறார். 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சி நடைபெற்றபோது துணை மேயர் பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையை தோற்கடித்து துணை மேயர் பதவியை கைப்பற்றினார். அதேபோல் 2006 -2011 காலகட்டத்திலும் திருச்சி மாநகராட்சி துணை மேயராக அன்பழகன் பதவி வகித்திருக்கிறார்.

5 முறை வெற்றி
இரண்டு முறை துணை மேயர், 5 முறை தொடர்ச்சியாக மாமன்ற உறுப்பினராக இருந்த இவருக்கு இந்த முறை திருச்சி மேயர் பதவி உறுதியாகியுள்ளது. இதனால் பதவியேற்பு விழாவுக்கான உற்சாகத்துடன் வலம் வருகிறார் மு.அன்பழகன். அமைச்சர் கே.என்.நேருவின் மிகத் தீவிர ஆதரவாளராக 30 ஆண்டுகளுக்கும் மேல் பயணித்து வருகிறார். இவருக்கு எதுவுமே செய்யமுடியவில்லையே என்ற வருத்தப்பட்ட அமைச்சர் நேரு, இப்போது மேயர் என்ற அந்தஸ்தை வழங்கவுள்ளார்.

துணை மேயர்
எல்லா மாநகராட்சிகளிலும் மேயர் பதவிக்கு தான் கடும் போட்டியிருக்கும். ஆனால் திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் பதவிக்கு கடும் போட்டி உருவாகியுள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தீவிர ஆதரவாளரும் மலைக்கோட்டை பகுதிச்செயலாளருமான மதிவாணனுக்கு துணை மேயர் பதவிக்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. அதேவேளையில் விஜயா ஜெயராஜும் துணை மேயர் பதவிக்கான ரேஸில் இருப்பதால் மறைமுகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

காங்கிரஸ் விருப்பம்
இதனிடையே திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவியை காங்கிரஸ் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது. திருச்சி மாநகராட்சி முன்னாள் பொறுப்பு மேயராக இருந்த சுஜாதா, துணை மேயர் பதவிக்கு காய் நகர்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வசம் இருப்பதால் மாநகராட்சி விவகாரத்தில் எந்த முக்கியப் பதவியும் திமுக தரப்பில் கொடுக்கப்படாது என்ற தகவலும் கசிந்துள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications