திருநாவுக்கரசு படத்தை துடைப்பம், செருப்பால் மாறி மாறி அடித்த மக்கள் அதிகார அமைப்பினர்
குற்றவாளிகள் படத்தை செருப்பால் அடித்த மக்கள் அதிகார அமைப்பினர்.
Recommended Video

திருச்சி: 400 பெண்களை நாசமாக்கிய ஆத்திரத்தில், கோபம் கொப்பளிக்க, கையில் துடைப்பக்கட்டையுடன் போராட வந்துவிட்டனர் மக்கள் அதிகார அமைப்பினர்!
பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்தது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இன்னமும் தீவிர நடவடிக்கையும், கடும் தண்டனையும் வேண்டும் என்பதுதான் பொதுவான விருப்பமாக இன்று தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது.
இது சம்பந்தமான ஏராளமான கல்லூரி மாணவ, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும்கூட பொள்ளாச்சியில் உள்ள கல்லூரிகளுக்கு இதனால் விடுமுறை விடப்பட்டது.

பிளக்ஸ் பேனர்கள்
குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை தரவும், இந்த சம்பவத்தை கண்டித்தும், திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். அப்போது குற்றவாளிகள் 4 பேரின் படங்கள் இடம்பெற்ற பிளக்ஸ் பேனர்கள் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது

பறை அடித்தனர்
போராட்டத்தின்போது, பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக மக்கள் கலை இலக்கிய கழகத்தினர், ஆவேசமாக பறையை அடித்து பாட்டு பாடினார்கள்.

முழக்கம்
சிபிஐ விசாரித்தால் மட்டும் என்ன பெரிய தண்டனையா கிடைக்க போகிறது. அந்த குற்றவாளிகளை மக்கள் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று விண்ணை பிளக்கும் முழக்கத்தை இந்த அமைப்பினர் எழுப்பினார்கள்.

செருப்பு
பிறகு ஒரு கட்டத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிளக்ஸ் பேனர் அருகில் கையில் துடைப்பக்கட்டைகளுடன் வந்தனர். 4 பேரின் உருவப்படத்தின் மீதும் துடைப்பத்தால் ஆவேசமாக அடித்தனர். இதையடுத்து, செருப்பை கொண்டு வந்து அடிக்க ஆரம்பித்தனர். 4 பேர் உருவப்படத்தின் மீதும் துடைப்பம், செருப்பு என மாறி மாறி கோஷங்களை எழுப்பியவாறே அடித்து நையப்புடைத்தனர்












Click it and Unblock the Notifications